டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய உளவுத் துறையில் வேலை வாய்ப்பு!

டிகிரி முடித்தவர்களுக்கு மத்திய உளவுத் துறையில் வேலை வாய்ப்பு!

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் உளவுத்துறையில் அதிகாரி பிரிவில் 2000 காலியிடங்களை நிரப்புவதற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கல்வித்தகுதி: ஏதாவது ஒரு பிரிவில் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும். மேலும் கம்ப்யூட்டரில் அடிப்படை அறிவு பெற்றிருக்க வேண்டும்.

வயது: விண்ணப்பிக்க விரும்புவர்கள் 9.1.2021 அடிப்படையில் 18 – 27 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இட ஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.

தேர்ச்சி முறை: டயர் 1 (100 மதிப்பெண்கள்), டயர் 2 (50 மதிப்பெண்கள்) என இரண்டு கட்ட எழுத்துத்தேர்வு, நேர்முகத்தேர்வு அடிப்படையில் தேர்ச்சி இருக்கும். தேர்வு ஒரு மணி நேரம் நடக்கும்.

பணியிடம்: தேர்வு செய்யப்படுபவர்கள் நாட்டின் எந்த பகுதியில் வேண்டுமானாலும் பணியமர்த்தப் படலாம்.

தேர்வு மையம் : தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.600. பெண்கள், எஸ்.சி., / எஸ்.டி., பிரிவினருக்கு ரூ. 500.

கடைசிநாள்: 9.1.2021

விபரங்களுக்கு:  ஆந்தை வேலைவாய்ப்பு!

Related Posts

error: Content is protected !!