சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வெளியானது!

சிபிஎஸ்இ பிளஸ் 2 மாணவர்களுக்கான மதிப்பெண் வெளியானது!

நாடெங்கும் உள்ள சிபிஎஸ்இ பிளஸ் டூ தேர்வுகள் நடைபெறாமலே பாஸ் என்று அறிவிக்கப்பட்ட முடிவுகள் இன்று மதிப்பெண்களுடன் வெளியாகியுள்ளன. இதில் கூட மாணவர்களை விட, மாணவிகள் அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர் என்பதுடன் 12.96 லட்சம் பேர் தேர்ச்சி.தேர்ச்சி விகிதம் 99.37%, மதிப்பெண் கணக்கீடு முடியாததால், 65,184 மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் ஆகஸ்ட் 5-ல் வெளியிடப்படும் என்று CBSE அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவெங்கும் கொரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதில், மாணவர்களின் 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்த நிலையில்

மாணவர்கள், தங்களின் உயர்கல்வி சேர்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு, சாத்தியமான வகையில் குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதை அடுத்து சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த 14.5 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், இன்று (ஜூலை 30-ம் தேதி) மதிய, 2 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.

இதில், மொத்தம் 99.37% பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 99.67 சதவீதமும், மாணவர்கள் 99.13 சதவீதமும் மூன்றாம் பாலின மாணவர்கள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தம் 14,088 பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 65,184 மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை. மதிப்பெண் கணக்கீடு முடியாததால், மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள் ஆகஸ்ட் 5-ல் வெளியிடப்படும் என்று CBSE அறிவித்துள்ளது.

மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைக் காண https://cbseresults.nic.in/ என்ற இணைய முகவரியைப் பார்க்க வேண்டும். இந்த ஆண்டு இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியானபிறகு அதில் திருத்தம் தேவைப்படும் மாணவர்களுக்காக சுப்ரீம் கோர்ட் உத்தர்வின் பேரில் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட இருக்கிறது

Related Posts

error: Content is protected !!