32°C
விளம்பரம்
Advertisement

வட கொரிய அதிபர் &, தென் கொரிய அதிபர் நேரடி சந்திப்பு நடந்துடுச்சு!

admin சேலம் Published: April 27, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




உலகின் பல்வேறு நாடுகளின் கடும் எதிர்ப்பையும் மீறி வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தியதால் கொரிய தீபகற்பத்தில் போர் பதட்டம் எழுந்தது. இதையடுத்து வடகொரியா மீது ஐ.நா. சபையும் அமெரிக்காவும் கடுமையான பொருளாதார தடைகளை விதித்தன. இதனிடையே அதிரடி திருப்பமாக தென்கொரியாவின் அழைப்பை ஏற்று கடந்த பிப்ரவரியில் நடைபெற்ற குளிர்கால ஒலிம்பிக் போட்டியில் வடகொரியா பங்கேற்றது. மேலும் தென்கொரிய பிரதிநிதிகள் வடகொரியாவுக்கு சென்று அந்த நாட்டு அதிபர் கிம் ஜோங் உன்னை சந்தித்துப் பேசினனர்.அப்போது ஏப்ரல் 27-ம் தேதி இருநாடுகளின் உச்சி மாநாட்டை நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி இரு நாட்டு எல்லை யில் உள்ள அமைதி கிராமமான பான் முன்ஜியோமில் இன்று உச்சி மாநாடு நடைபெறுகிறது. அதையொட்டி இரு நாட்டு எல்லைக் கோட்டில்  வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தென் கொரிய அதிபர் மூன் ஜேவை சந்தித்தார். இச்சந்திப்பு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

அளவில் நமது இலங்கையை அல்லது இந்திய மேற்கு வங்காளத்தை ஒத்த கொரிய நாடு, இப்போது வட கொரியா மற்றும் தென் கொரியா என்று இரு பிரிவாக பிரிந்து கிடக்கிறது…இன்றைக்கும் தெருச் சண்டைகளை ஓரமாக நின்று பார்க்க வேடிக்கையாக இருக்கும். ஆனால் நாட்டுக்கு நாடு தெருச் சண்டை பார்க்க வேண்டுமானால் கடன் பட்டாவது கொரிய நாடுகளின் எல்லைக்கு போக வேண்டும். அந்த சண்டை தெருச் சண்டையை விடவும் கேவலமாக இருக்கும். அடிக்கடி வன்முறையாகவும் மாறுவதால் வேடிக்கை பார்ப்பதென்றால் கவனமாக ஒதுங்கி, கவனமாக நிற்க வேண்டிய சூழ்நிலைதான் நிலவியது.

இந்த வடகொரியா, தென் கொரியா என்ற இந்த இரு நாடுகளுக்கும் இடையிலான தெருச்சண்டை இன்று நேற்று ஆரம்பமானது அல்ல. இரண்டாவது உலகப் போரோடு ஆரம்பமான வரலாற்று பெருமை கொண்டது. கடந்த அரை நூற்றாண்டுக்கு மேலாக வட கொரியா ஷெல் தாக்குதல் நடத்துவதும்.. பதிலுக்கு தென் கொரியா ஏகப்பட்ட பீரங்கி குண்டுகளை போடுவதும் வாடிக்கை.

அதனப்டி வரலாற்று சிறப்பு மிக்க கொரியா போர் முடிந்து 65 ஆண்டுகள் ஆன பின் முதன் முறையாக, வடகொரிய அதிபராக உள்ள கிம் ஜோங் உன், தென் கொரியா சென்றார். இருநாடுகள் இடையிலான உச்சி மாநாட்டில் கலந்து கொள்ள தென் கொரியா சென்ற கிம்மிற்கு, இருநாட்டு எல்லையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே வரவேற்பு அளித்தார். விரைவில் அணு ஆயுதமற்ற நாடாக கொரியாவை மாற்றுவது குறித்து இருவரும் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.

மாநாட்டின் நினைவாக பான்முன்ஜியோம் அமைதி கிராமத்தில் மரம் நடப்பட உள்ளது. இதற்காக இருநாடுகளில் இருந்து மண், தண்ணீர் எடுத்து வரப்பட்டிருக்கிறது. அடுத்த மாதம் வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன்னும் அமெரிக்க அதிபர் ட்ரம்பும் சந்தித்துப் பேச திட்டமிட்டுள்ளனர். அதற்கு இந்த உச்சி மாநாடு பாதை வகுக்கும் என்று கணிப்பது நடந்தால் சரிதான்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்