சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு!

சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா வங்கியில் அப்ரண்டிஸ் வேலை வாய்ப்பு!

பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியாவில் அப்ரண்டிஸ் பயிற்சி பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியா முழுவதும் மொத்தம் 4500 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதில் தமிழகத்தில் 202 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 23.06.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

பணி விபரம்

Apprentice

காலியிடங்களின் எண்ணிக்கை:

4500

கல்வித் தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலைப் பட்டப்படிப்பு முடித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி:

31.05.2025 அன்று 20 வயது முதல் 28 வயது வரை உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

ஊக்கத்தொகை:

ரூ. 15,000

தேர்வு செய்யப்படும் முறை:

இந்த பணியிடங்களுக்கு கணினி வழித் தேர்வு மற்றும் வட்டார மொழித் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://nats.education.gov.in/ என்ற இணையதளப் பக்கம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:

23.06.2025

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப் பிரிவினர் ரூ.800. எஸ்.சி, எஸ்.டி பிரிவினர் ரூ.600

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய ஆந்தை வழிகாட்டி/வேலைவாய்ப்பு என்ற லிங்கை கிளிக் செய்து கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

CLOSE
CLOSE
error: Content is protected !!