பதற வைக்கும் போர் முனையும் நெகிழ வைக்கும் போட்டோகிராபர்களும்!

பதற வைக்கும் போர் முனையும் நெகிழ வைக்கும் போட்டோகிராபர்களும்!

சிரியாவின் அலிப்போ பகுதியில் கடந்த வாரம், பயங்கர குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இந்த தாக்குதலில் 126 பேர் பலியாகினர். இவர்களில் 80 க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இச்சம்பவத்தை போட்டோ எடுப்பதற்காக பத்திரிக்கையாளர்கள் பலர் அங்கு குவிந்தனர்.

அவர்களில் அப்த் அல்கதர் ஹபக் என்பவர், யாரும் எதிர்பாராத விதமாக தனது கேமிராவை தூக்கி எறிந்து விட்டு, அங்கு உயிருக்கு போராடிக் கொண்டிருந்த குழந்தைகளை தூக்கிக் கொண்டு ஓடி, ஆம்புலன்சில் சேர்த்தார். முதலில் அவர் ஓடிச் சென்ற தூக்கிய குழந்தை உயிரிழந்திருந்தது. அடுத்து அவர் தூக்கிய குழந்தைக்கு உயிர் இருந்தது. முகம் மண்ணில் புதைந்தபடி கிடந்த குழந்தையை அவர் தூக்கிய போது, அக்குழந்தை முகம் சிதைந்து உயிரிழந்தது.

இதனைக் கண்ட ஹபக், அக்குழந்தையில் அருகில் மண்டியிட்டு கதறி அழுதார். பின்னர் தொடர்ந்து தனது சக நண்பர்களையும் அழைத்து பலரையும் மீட்டார். சிறிது நேரத்தில் மீண்டும் தனது கேமிராவை எடுத்து, அங்கிருந்தவற்றை போட்டோ எடுக்க துவங்கினார்.

gallerye_155748247_1754651

பத்திரிக்கையாளர்கள் அவரை சூழ்ந்து கொண்டு கேட்ட போது, அது மிகவும் பயங்கரமான காட்சி. அதுவும் அந்த குழந்தைகள் ரத்தம் சொட்ட, செத்துக் கொண்டிருந்தனர். கன் முன் உயிருக்கு போராடும் குழந்தையை விட எதுவும் பெரிதாக தெரியவில்லை என்றார். ஹபக்கின் இந்த செயல்களை அருகில் இருந்த ஒருவர் போட்டோவாக எடுத்து வெளியிட்டது இன்றளவும் வைரலாக பரவுகிறது. இந்நிலையில்

அமெரிக்கா ராணுவத்தில் போர் தொடர்பான புகைப்படங்களை எடுக்கும் பிரிவில் இருந்தவர் பெண் போட்டோக்ராபர் ஹில்டா கிளைடோன் (வயது 22). ஆப்கானிஸ்தானில் அமெரிக்க மற்றும் ஆப்கானிஸ்தான் ராணுவப்படைகள் பயிற்சியின் போது மோட்டார் குண்டுவெடிப்பில் ஹில்டா உயிரிழந்தார். அவர் தான் உயிரிழந்த குண்டுவெடிப்பையும் தன்னுடைய கேமராவில் புகைப்படம் எடுத்து உள்ளார். இப்போது அதனை அந்நாட்டு ராணுவம் வெளியிட்டு உள்ளது.
201705041019238166_Afghanistan-US-Army-photographer-captured-blast-moment_SECVPF
ஆப்கானிஸ்தானின் லாக்மான் மாகாணத்தில் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை 2-ம் தேதி பயிற்சி நடைபெற்ற போது எதிர்பாராத விதமாக நேரிட்ட விபத்து சம்பவத்தில் சிறப்பு புகைப்பட கலைஞராக பணியாற்றிய ஹில்டா உயிரிழந்தார். மோட்டார் குண்டு வெடிப்பில் 4 ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்களும் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பான சம்பவங்கள் அனைத்தையும் அவர் தன்னுடைய போட்டோவில் புகைப்படமாக எடுத்து உள்ளார். ஹில்டா உயிரிழப்பானது ராணுவத்தில் பயிற்சி மற்றும் போரின் போது ராணுவ வீரர்களுக்கு இணையாக பெண் வீராங்கனைகளும் எப்படி அபாயகரமான சூழல்களுக்கு ஆளாகிறார்கள் என்பதை எடுத்துக்காட்டுகிறது என அமெரிக்கவின் ராணுவ பத்திரிக்கை செய்தி வெளியிட்டு உள்ளது.
error: Content is protected !!