உலகை உள்ளங்கைக்குள் அடக்கி விட்ட கூகுள் நிறுவனத்தில் 12,000 தொழிலாளர்கள் பணிநீக்கம்!.

உலகை உள்ளங்கைக்குள் அடக்கி விட்ட கூகுள் நிறுவனத்தில் 12,000 தொழிலாளர்கள் பணிநீக்கம்!.

ர்வதேச அளவில் பிரபலமான தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், பல்வேறு நாடுகளில் கிளைகளை அமைத்துள்ள பெரு நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் அளவை குறைத்துவரும் போக்கு அதிகரித்துக் கொண்டே போகிறது.. இதன் ஒரு அங்கமாக கூகுள் நிறுவனத்தின் தாய் நிறுவனமும் தனது ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. கூகுள் தாய் நிறுவனமான ஆல்பாபெட் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. உலகம் முழுவதிலும் ஆல்பாபெட் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்படுவதாகவும், இதில் அமெரிக்காவில் பணிபுரியும் ஊழியர்கள் உடனடியாக பணி நீக்கம் செய்யப்படுவதாகவும் ஆல்பாபெட் தெரிவித்துள்ளது.

ஆம்.. கோவிட்-19 தொற்று தாக்கத்தால் ஏற்பட்ட பாதிப்புகளை தொடர்ந்து ஊழியர்களைக் குறைக்கும் சமீபத்திய தொழில்நுட்ப நிறுவனமாக கூகுள் மாறியுள்ளது. கொரோனா வைரஸ், உக்ரைன் – ரஷியா போர், கச்சா எண்ணெய் விநியோகம், அரசியல் நிலைத்தன்மை, உற்பத்தி – நுகர்வு இடையேயான வேறுபாடு உள்பட பல்வேறு காரணங்களால் கடந்த சில ஆண்டுகளாக உலக பொருளாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே, 2023-ம் ஆண்டில் 3-ல் 1 பங்கு உலக பொருளாதாரம் மந்த நிலையை சந்திக்கும் என்று ஐஎம்எப் எனப்படும் சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜார்ஜிவா இந்த ஆண்டு தொடக்கத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதனை தொடர்ந்து பல்வேறு பெருநிறுவனங்கள், ஐடி நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களின் எண்ணிக்கையை குறைத்து பணி நீக்க அறிவிப்பை வெளியிட்டு வருகின்றன. அந்த வகையில், உலகம் முழுவதும் உள்ள தனது ஊழியர்களில் 10 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்ய மைக்ரோசாப்ட் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதேபோல், அமெரிக்காவின் பிரபல முதலீட்டு வங்கி, நிதி சேவை நிறுவனமான கோல்ட்மென் சச்ஸ் சுமார் 3 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதேபோல், அமேசான் நிறுவனமும் தங்கள் ஊழியர்களில் கணிசமான அளவிற்கு பணி நீக்கம் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இதில் தன் பங்காக சிலிக்கான் பள்ளத்தாக்கின் கூகுள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை வெள்ளிக்கிழமை ஊழியர்களுக்கு மின்னஞ்சல் மூலம் செய்தி ஒன்றை பகிர்ந்து கொண்டார், சுந்தர் பிச்சை வெளியிட்ட குறிப்பில், எங்கள் பணியின் வலிமை, எங்கள் தயாரிப்புகள், சேவைகளின் மதிப்பு மற்றும் ஆல்பபெட்டில் எங்களது ஆரம்ப முதலீடுகள் ஆகியவற்றின் காரணமாக எங்களுக்கு முன்னால் இருக்கும் மிகப்பெரிய வாய்ப்பை பற்றி நான் நம்பிக்கையுடன் இருக்கிறேன்.இன்று நாங்கள் எதிர்கொள்ளும் வேறுபட்ட பொருளாதார யதார்த்தத்திற்காக விரைவாக பணியாளர்களின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இப்படியான பணி நீக்கத்திற்கு நான் முழு பொறுப்பேற்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

கூகுளின் இந்த நடவடிக்கை பிற தொழில்நுட்ப நிறுவனங்களிலும் எதிரொலிக்கும் என்றே தெரிகிறது.

நிலவளம் ரெங்கராஜன்

error: Content is protected !!