மணிப்பூருக்கு இப்போது தேவை அமைதி மட்டுமே- ராகுல் காந்தி!

மணிப்பூருக்கு இப்போது தேவை அமைதி மட்டுமே- ராகுல் காந்தி!

லவர களமாக இருக்கும் மணிப்பூர் சென்ற காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, ஆளுநரை சந்தித்த பிறகு, பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் நிவாரண முகாம்களில் உள்ள குறைபாடுகளை சரிசெய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறினார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தனது மணிப்பூர் பயணத்தின் போது, ​​’ஒத்த எண்ணம் கொண்ட’ கட்சித் தலைவர்கள், ஐக்கிய நாகா கவுன்சில் (யு.என்.சி) தலைவர்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் உறுப்பினர்களை வெள்ளிக்கிழமை இம்பால் ஹோட்டலில் சந்திக்கிறார்.

2ஆம் நாள் சுற்றுப் பயணமாக ஹெலிகாப்டர் மூலம் மொய்ரங் பகுதிக்கு சென்ற ராகுல் காந்தி அங்கு இரண்டு நிவாரண முகாமில் தஞ்சமடைந்துள்ள மக்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவர்களின் குறைகளை கேட்டறிந்தார். அப்போது சிறுமி ஒருவர், கலவரத்தால் தமது குடும்பம் பாதிக்கப்பட்டதை கண்ணீர் மல்க எடுத்துரைத்தார்.

மணிப்பூர் மக்களை சந்தித்தது குறித்து ராகுல் காந்தி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ”மணிப்பூர் சகோதர சகோதரிகளின் துயரங்களைப் பார்க்கவும், கேட்கவும், உணரவும், இன்று மொய்ராங்கில் உள்ள நிவாரண மையங்களுக்குச் சென்றேன். வெறுப்பும் வன்முறையும் ஒரு பேரழிவு. நாம் அனைவரும் அதை அன்பாலும், ஒருவரோடு ஒருவர் தொடர்பு கொள்வதாலும் மட்டுமே எதிர்கொள்ள முடியும்.

மணிப்பூரில் வன்முறையால் சொந்தங்களையும், வீடுகளையும் இழந்தவர்களின் நிலையைப் பார்ப்பதும் கேட்பதும் மனவேதனை அளிக்கிறது. நான் சந்திக்கும் ஒவ்வொரு சகோதர, சகோதரி மற்றும் குழந்தையின் முகத்திலும் உதவிக்கான குரல் ஓங்கி ஒலிக்கிறது. மணிப்பூருக்கு இப்போது தேவை அமைதி மட்டுமே. நமது முயற்சிகள் அனைத்தும் அந்த இலக்கை நோக்கியே ஒன்றுபட வேண்டும்” என்று பதிவிட்டுள்ளார்.