அதாகப்பட்டது மகாஜனங்களே! – டீசர்

அதாகப்பட்டது மகாஜனங்களே! – டீசர்

தம்பிராமய்யா மகன் கதாநாயகன் டைரக்டரும், குணச்சித்ர நடிகருமான தம்பிராமய்யாவின் மகன் உமாபதி, ஒரு படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இந்த படத்துக்கு, ‘அதாகப்பட்டது மகாஜனங்களே’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. கதாநாயகியாக ரேஷ்மா ரத்தோர் நடிக்கிறார். பாண்டியராஜன், மனோபாலா, ஆடுகளம் நரேன், கருணாகரன் ஆகியோரும் உடன் நடிக்கிறர்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இன்பசேகர் டைரக்டு செய்கிறார்.

படத்தை பற்றி இவர், ” “நாம் எவ்வளவுதான் கணக்கு போட்டாலும், அதே பிரச்சினைக்கு வாழ்க்கை வேறு ஒரு கணக்கு போட்டு வைத்து இருக்கும். இந்த கருவை மையமாக வைத்து படம் தயாராகிறது. உயிர் நண்பனுக்கு உதவப்போய் பிரச்சினைகியில் மாட்டுகிறான், ஒரு இளைஞன். அந்த சிக்கலில் இருந்து அவன் எப்படி மீள்கிறான்? என்பதை ந்கைச்சுவையாக சொல்கிறோம். டி.இமான் இசையமைக்கிறார். எஸ்.ரமேஷ்குமார் தயாரிக்கிறார்” என்றார்

error: Content is protected !!