எல்.ஐ.சி.யை வீழ்த்திய அதானியின் ஊழல் சர்ச்சை!

எல்.ஐ.சி.யை வீழ்த்திய அதானியின் ஊழல் சர்ச்சை!

நேற்று ஓ.சி.சி.ஆர்.பி., எனும் புலனாய்வு அமைப்பு, அதானி குழும முதலீடுகள் குறித்த புதிய குற்றச்சாட்டு அறிக்கையை வெளியிட்டது. இது இந்திய வர்த்தகத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த அறிக்கையின் காரணமாக அதானி குழும நிறுவனங்களின் சந்தை மதிப்பு, நேற்றைய ஒரே நாள் வர்த்தகத்தில் மட்டுமே ரூ.35,600 கோடி அளவுக்கு சரிவைக் கண்டது. அதிலும் அதானி எண்டர்பிரைசஸ், டோட்டல் கேஸ், அதானி கிரீன் எனர்ஜி உள்ளிட்ட 9 நிறுவன பங்குகள் கடுமையான வீழ்ச்சியை சந்தித்தன.

இதன் காரணமாக எல்.ஐ.சி நிறுவனத்திற்கு மட்டும் நேற்று ஒரே நாளில் ரூ.1,439.8 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. எல்.ஐ,சி நிறுவனம் அதானி குழுமத்தில் உள்ள அதானி துறைமுகம் மற்றும் சிறப்பு பொருளாதார நிறுவனத்தில் 9.12% பங்குகளையும், அதானி எண்டர்பிரைசஸ் நிறுவனத்தில் 4.26% பங்குகளையும், அதானி டோட்டல் கேஸ் நிறுவனத்தில் 6% பங்குகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் காரணமாகவே எல்.ஐ.சி.க்கு இந்த இழப்பு ஏற்பட்டுள்ளது. அதானி குழுமத்தை சேர்ந்த பட்டியலிடப்பட்ட நிறுவனங்களின் மொத்த சந்தை மதிப்பு, நேற்று கிட்டத்தட்ட 10.84 லட்சம் கோடி ரூபாயிலிருந்து, 10.49 லட்சம் கோடி ரூபாயாக சரிவைக் கண்டது.

சர்வதேச அளவில் பெரும் பணக்காரராகவும், தொழிலதிபராகவும் இருப்பவர் அதானி. இவரது அதானி குழுமம் பல்வேறு முறைகேடுகளை செய்ததாக எழுப்பப்பட்ட குற்றச்சாட்டை தொடர்ந்து, பெரும் சரிவை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது..

error: Content is protected !!