ஆலகாலம் – விமர்சனம்!

ஆலகாலம் – விமர்சனம்!

மீபகாலமாக பிறந்த நாள், திருமணம், பதவி உயர்வு, ஊதிய உயர்வு என எதற்கெடுத்தாலும் நண்பர்களுக்கு ‘பார்ட்டி’ கொடுப்பது என்பது ஒரு கட்டாய நிகழ்வாகவே உள்ளது. அதிலும் அந்த பார்ட்டிகளில் முக்கிய இடம் பிடித்திருப்பது மதுபானம்தான். மேலும் தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் மதுக்கடைகளின் விற்பனை மற்ற நாட்களைவிட நான்கு மடங்கு அதிகரிக்கிறது. போதைப் பழக்கத்துக்கு அடிமையாவோர் பணிபுரியும் இடம், வீடு, பள்ளி, கல்லூரி உள்ளிட்ட இடங்களில் பல்வேறு பிரச்னைகளைச் சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மேலும், சுற்றத்தாரிடமிருந்து ஒதுக்கி வைக்கப்படும் சூழலுக்குத் தள்ளப்படுகின்றனர்.இந்தியாவில் 1950-60களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்தவர்களில் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டவர்கள் 19.5 சதவீதம். இதுவே, 1981-86-க்கு இடையே பிறந்தவர்கள் தங்கள் இளமைப் பருவத்தில் குடிப்பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டோர் 74.3 சதவீதம் என ஒரு ஆய்வு முடிவு தெரிவிக்கிறது. இதை எல்லாம் கவனத்தில் கொண்டு வந்திருக்கும் படமே ஆலகாலம். இத்தனைக்கும் குடியின் தீமையை பற்றி நிறைய படங்கள் வந்திருக்கின்றன ஆனால் இந்த படத்தைப்போல். எந்த படமும் இவ்வளவு அழுத்த மாக குடியின் தீமையை சொல்லவில்லை என்று அடித்து சொல்லி விடலாம்.

கதை என்னவென்றால் வில்லேஜ் ஒன்றின் ஏழைத்தாயின் ஒரே மகனான ஹீரோ ஜெயகிருஷ்ணா சென்னையில் உள்ள இன்ஜினியரிங் காலேஜில் படிக்கிறார். தனது மகன் பெரிய கல்லூரியில், பெரிய படிப்பு படிப்பதால், அவரது ஸ்டடி முடிந்ததும் தங்களது லைஃப் ஸ்டைலே மாறிவிடும், என்ற நம்பிக்கையில் இருக்கிறார் ஜெயகிருஷ்னாவின் அம்மா ஈஸ்வரி ராவ். இதற்கிடையே, ஹீரோ ஜெயகிருஷ்ணாவின் கேரக்டர், ரேங்க் ஆகியவற்றால் ஈர்க்கப்படும் சக மாணவி நாயகி சாந்தினிக்கு அவர் மீது லவ் ஏற்படுகிறது. சாந்தினியின் காதலை ஜெயகிருஷ்ணாவும் ஏற்றுக்கொள்கிறார். ஆனால், இந்த காதலால் ஜெயகிருஷ்ணாவின் வாழ்வில் நுழையும் வஞ்சகம் மற்றும் சூழ்ச்சி அவரை மதுப்பழக்கத்திற்கு அடிமையாக்கி விடுகிறது. இதனால், ஒரு தாயின் கனவும், ஒரு இளைஞனின் லட்சியமும் எப்படி சிதைக்கப்படுகிறது, என்பதை சொல்வது தான் ‘ஆலகாலம்’.

ஹீரோ ரோலில் வெள்ளந்தியான சிரிப்போடு இயல்பாக நடித்து தனது கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்க்கும் டைரக்டர் & நடிகர் ஜெயகிருஷ்ணா, இரண்டாம் பாதியில்தான் மது பழக்கத்திற்கு அடிமையான மனிதனை அப்பட்டமாக வெளிப்படுத்தி அசுரத்தனமாக நடித்து இருப்பதோடு, ரசிகர்களை எழுந்து நின்று கைதட்டவும் வைத்து விடுகிறார் ஹீரோயின் கேரக்டரில் வரும் சாந்தினி, கல்லூரி மாணவி மற்றும் மனைவி என இரண்டுவிதமான வேடங்களுக்கும் கச்சிதமாக பொருந்துவதோடு, இரண்டு ரோலிலும் பொருத்தமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்து விடுகிறார். நாயகனின் அம்மாவாக நடித்திருக்கும் ஈஸ்வரி ராவ், “சாமியே கேட்டாலும் நான் மதுவை வைத்து படையல் போட மாட்டேன்” என்று பேசிவிட்டு, தனது மகனின் நிலையை பார்த்து அவருக்காக மதுக்கடையில் மது வாங்கும் காட்சி படம் பார்ப்பவர்களை கலங்க வைத்து விடுவதில் ஜெயித்து விடுகிறார்..

கேமராமேன் கா.சத்தியராஜின் ஒளிப்பதிவு பெட்டர் ரகத்தில் சேர்ந்து விடுகிரது. பாடல்கள் மற்றும் பின்னணி இசையும் பரவாயில்லை என்ற ரேஞ்சில் வழங்கி இருக்கிரார் இசையமைப்பாளர் என்.ஆர்.ரகுநந்தன்.

சர்வதேச அளவில் போதைப் பொருட்களைப் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்து வந்தாலும், இந்தியாவில் சுமார் 10 கோடி பேர் போதைப் பழக்கத்திற்கு ஆளாகி உள்ளனர் என்றும், இவர்களில் 12-25 வயதில் உள்ளோர் அதிகம் உள்ளனர் என்றும், நகர்ப்புறங்களிலேயே இவர்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்றும் சில ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. இதில், இளைஞர்கர்கள் குறிப்பாக கல்லூரி மாணவ, மாணவிகளிடையே மது பழக்கம் அதிகரித்துக் கொண்டே போவதாக தெரிய வரும் சூழலில் ஓர் விழிப்புணர்வு படமிது என்றே சொல்ல வேண்டும்..

மொத்தத்தில் இந்த ஆலகாலம் – இளசுகளுக்கான நவீன கசப்பு மருந்து

மார்க் 3/5

error: Content is protected !!