ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுகிறது! – எஸ்.பி.ஐ. குற்றச்சாட்டு!

ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுகிறது! – எஸ்.பி.ஐ. குற்றச்சாட்டு!

ஆதார் எதெதெற்கு அவசியம் என்று இன்னும் தெளிவான வழிகாட்டுதல் இல்லை. மொபைல் ஷாப்-களில் ஆதார் அட்டை நீட்டினால்தான் புது சிம் கிடைக்கும் போக்கு நிலவுகிறது.. அதே சமயம் வங்கிகளில் ஆதார் எண்ணை இணைக்காதோர் எண்ணிக்கையும் கணிசமாக இருக்கிறது. இப்படி யான சூழலில் ஆதார் தகவல்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதாக பாரத ஸ்டேட் வங்கி குற்றஞ் சாட்டுவதும், அந்தக் குற்றச்சாட்டைத் தனித்தன்மை அடையாள ஆணையம் (யு.ஐ.டி.ஏ.ஐ) மறுத்தும் அறிக்கைப் போர் நடத்துகிறது.

அதாவது சண்டிகரின் ஜிந்து என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் விக்ரம். 40 வயதான இவர் பாரத ஸ்டேட் வங்aகி அங்கீகாரத்துடன் ஆதார் அடையாள அட்டை பதிவு செய்யும் தொழிலைச் செய்து வருகிறார். கடந்த 2018ம் ஆண்டு நவம்பர் 14ம் தேதியன்று சண்டிகரில் இருந்த விக்ரமுக்கு, அவரது பஞ்சாப் நேஷனல் வங்கி கணக்கிலிருந்து 1000 ரூபாய் எடுக்கப்பட்டதாகவும் டெல்லியில் எஸ்பிஐ மைக்ரோ ஏடிஎம் மூலம் இந்த பணம் எடுக்கப்பட்டிருக்கிறது எனவும் குறுஞ்செய்தி வந்துள்ளது. தொடர்ந்து நவம்பர் 20ம் தேதி பீகார் மாநிலத்தின் மதுபானி என்ற இடத்தில் மீண்டும் 7,500 ரூபாய் இவரது ஹெச்.டி.எஃப்.சி. வங்கி கணக்கிலிருந்து மைக்ரோ ஏடிஎம் வழியாக அவரது கைரேகைப் பதிவை பயன்படுத்தி எடுக்கப்பட்டிருக்கிறது.

இதனால் குழப்பம் ஏற்பட்ட நிலையில் ஆதார் கைரேகை பதிவுகள் திருடப்பட்டுவிட்டனவா என்று விக்ரமுக்கு சந்தேகம் எழுந்துள்ளது. பயோமெட்ரிக்ஸ் பயன்படுத்தப்படும் இடங்களில் கைரேகைப் பதிவை சிலிக்கான் பிரதி எடுத்து மோசடி செய்வது பற்றி அறிந்திருந்த அவர் ஆதார் ஆணையத் திடம் புகார் கொடுத்துள்ளார். ஆனால், ஆதார் ஆணைய அதிகாரிகள் அவரை ஆதார் இணைய தளத்துக்குச் சென்று அவரது ஆதார் எண்ணுக்கான கைரேகை பதிவை லாக் செய்து விடுமாறு மட்டும் அறிவுறுத்தியுள்ளனர். அதன்படி விக்ரம் தனது ஆதார் கைரேகைப் பதிவை லாக் செய்த பின்பும் திருட்டு தொடர்ந்துள்ளது.

அப்படி கைரேகை போன்ற பயோமெட்ரிக் பதிவை யார் எப்படி திருடினார்கள் என்பது ஆதார் ஆணையத்துக்கே புதிராக உள்ளது. இதையடுத்து ஆதார் தகவல்கள் தவறாக பயன்படுத்தப் படுவதாக பாரத ஸ்டேட் வங்கி குற்றம்சாட்டியது. இதற்கு பதிலளித்துள்ள தனித்தன்மை அடையாள ஆணையம்(யு.ஐ.டி.ஏ.ஐ), ஆதார் பதிவு மேற்கொள்பவரின் ஒரே அடையாளத்தில் ஒரு நேரத்தில் பல இடங்களில் திறந்து பதிவு மேற்கொள்ள இயலாது. ஆதார் தகவல்கள் எல்லாம் அத்தனை எளிதாக யாராலும் எடுக்க முடியாது. அவை அனைத்தும் அத்தனை பாதுகாப்பாக இருக்கிறது.

தற்போது எஸ்பிஐ கூறிய புகாரை விசாரித்து வருகிறோம் எனவும் தெரிவித்துள்ளது.

error: Content is protected !!