32°C
விளம்பரம்
Advertisement

பா.ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர மோடி :ராஜ்நாத் சிங் அறிவிப்பு!

admin சேலம் Published: September 13, 2013 3 நிமிட வாசிப்பு இந்தியா
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளராக குஜராத் முதல்–மந்திரி நரேந்திர மோடியை அறிவிக்க வேண்டும் என்று கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடப்பட்டது. ஆனால் பா.ஜ.க மூத்த தலைவர் அத்வானி, இந்த விஷயத்தில் அவசரம் காட்ட வேண்டாம் என்று எதிர்ப்பு தெரிவித்ததால் இழுபறி ஏற்பட்டது.நவம்பர் மாதம் 5 மாநில தேர்தல் முடிந்தபிறகு மோடியை முன் நிறுத்தலாம் என்று அத்வானி கூறி வந்தார். ஆனால் ஆர்.எஸ்.எஸ் தலைவர்களோ, நரேந்திர மோடியை உடனே அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்கள்.இதைத் தொடர்ந்து டெல்லியில் இன்று (வெள்ளிக்கிழமை) மாலை பா.ஜ.க ஆட்சி மன்றக்குழுக் கூட்டம் நடந்தது. அந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த தலைவர்கள் அனைவரும் பங்கேற்றனர். ஆனால், மோடி விஷயத்தில் ஆரம்பம் முதலே முட்டுக்கட்டை போட்டு வந்த அத்வானி கூட்டத்திற்கு வரவில்லை. இக்கூட்டத்தில் பா.ஜ.க பிரதமர் வேட்பாளர் குறித்து விவாதம் நடத்தப்பட்டது. அப்போது மோடிக்கு அதிக ஆதரவு இருந்ததால், அவரை பிரதமர் வேட்பாளராக நியமிக்க முடிவு செய்யப்பட்டது.
sep 13 modi mini
பின்னர் நிருபர்களை சந்தித்த ராஜ்நாத் சிங், மோடியை பிரதமர் வேட்பாளராக நியமித்திருப்பதாக தெரிவித்தார். மேலும் அத்வானியை சந்தித்து அவர் வாழ்த்து பெறுவார் என்றும் கூறினார். பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்பட்ட மோடிக்கு, சுஷ்மா சுவராஜ், ரவி சங்கர் பிரசாத், அருண் ஜெட்லி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர். கட்சி அலுவலகத்திற்கு வெளியில் திரண்டிருந்த மோடியின் ஆதரவாளர்கள் அவரை வாழ்த்தி கோஷமிட்டபடி ஆரவாரம் செய்தனர்.

இதையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் பிரதமர் பதவி வேட்பாளராக தன்னை அறிவித்ததற்கு நன்றி தெரிவித்து கொள்வதாக நரேந்திர மோடி கூறினார். தமது பெயரை பிரதமர் வேட்பாளராக பரிந்துரைத்த கட்சியின் மூத்த தலைவர்களுக்கும், கூட்டணி கட்சிகளுக்கும் நன்றி தெரிவித்துள்ளதாகவும் மோடி கூறினார். பாரதிய ஜனதா கட்சியில் பல்வேறு நிலைகளில் சாதாரண ஊழியனாக பணியாற்றியவன் நாள் என்று கூறிய மோடி கடவுள் ஏராளமான பலத்தை தனக்கு தந்துள்ளதாக பெருமிதமாக மோடி கூறினார். கடை நிலை வீரன் ஒருவனுக்கு மிகப் பெரிய பணியை கட்சி வழங்கியுள்ளதாக மோடி கூறினார். தன் மேல் அனைவரும் வைத்திருக்கும் நம்பிக்கையை நிச்சயம் காப்பாற்றுவேன் என்றும மோடி கூறினார்.

Narendra Modi announced as BJP’s Prime Ministerial candidate for 2014

******************************************************************************
Meeting at Advani’s residence over. While leaving Advani’s house, Sushma Swaraj said that there is no official word about a Parliamentary board meeting yet and that meetings are still on.* Akali Dal leader Naresh Gujral says that the NDA stands united over Modi’s PM candidature. A formal announcement is likely at 5 pm on Friday.* According to television reports, a BJP source has said that LK Advani has informed Sushma Swaraj and Rajnath Singh that he will not be interested in working for the party if Modi is projected as the party’s prime ministerial candidate for the 2014 Lok Sabha elections.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்