32°C

2021-ம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு!

admin Published: October 11, 2021 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து:

லகின் உயரிய விருதான நோபல் பரிசு, இயற்பியல், வேதியியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய 6 துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வே நாட்டில் வழங்கப்படுகிறது. மற்ற துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஸ்வீடன் தலைவர் ஸ்டாக்ஹோமில் வழங்கப்படுகிறது. அதன்படி, கடந்த வாரம் முதலே 2021ம் ஆண்டில் மருத்துவதுறை, இயற்பியல் துறை, வேதியியல், இலக்கியத்துறை மற்றும் அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.

விளம்பரம்
VMTalks In-article Ad Slot

இந்த நிலையில் சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் பொருளாதாரத்திற்கான நோபல் பரிசை தேர்வுக்குழு அறிவித்துள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் கார்ட், ஜோஸ்வா டி ஆங்க்ரிஸ்ட் மற்றும் கெய்டோ டபிள்யூ. இம்பென்ஸ் ஆகிய மூவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக ராயல் சுவீடிஷ் அகாடமி ஆஃப் சயின்சஸ் அறிவித்துள்ளது..!

தொழிலாளர்களின் பொருளாதாரம் குறித்த பங்களிப்பிற்காக இவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. குறைந்தபட்ச ஊதியம், குடியேற்றம் மற்றும் கல்வி ஆகியவற்றின் தொழிலாளர் சந்தை விளைவுகளை பகுப்பாய்வு செய்துள்ளதற்காக டேவிட் கார்ட்டுக்கு ஒரு பாதியும், மற்றொரு பாதி ஜோசுவா டி. ஆங்கிரிஸ்ட் மற்றும் கைடோ டபிள்யூ இம்பென்ஸ் ஆகியோருக்கு பகிர்ந்து அளிக்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.டேவிட் கார்ட் என்பவர் கனாடியன் தொழிலாளர் பொருளாதார நிபுணர் மற்றும் பெர்க்லியின் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளாதார பேராசிரியர் ஆவார்.