32°C
விளம்பரம்
Advertisement

ஏப்ரல் 8 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகள்!

admin சேலம் Published: April 5, 2021 1 நிமிட வாசிப்பு Exclusive
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



தமிழ்நாடு முழுவதும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, ஏப்ரல் 8ம் தேதி முதல் நேரடி வகுப்புகளை மீண்டும் நடத்த, பள்ளித் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்தும் வகையில், மாநிலம் முழுதும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும், நேரடி வகுப்புகள் நடைபெற்றுவந்தன. அதே சமயம் தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் நாளை (ஏப்ரல் 6ம் தேதி) நடைபெறும் நிலையில், பிளஸ் 2 மாணவர்களுக்கு நாளை மறுதினம் வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.

நாளை சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு முடிந்ததும், ஏப்ரல் 8ம் தேதியிலிருந்து 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மீண்டும் நேரடி வகுப்புகளை நடத்த, பள்ளிக் கல்வித் துறை அனுமதி அளித்துள்ளது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, மே 3ம் தேதி பொது தேர்வு துவங்க உள்ளதால், அதற்கு முன் மாணவர்களுக்கு இரண்டாவது ஆயத்த தேர்வுகளை நடத்தவும், ஆய்வக பயிற்சிக்கான செய்முறை தேர்வுகளை ஏப்ரலில் நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்