32°C
விளம்பரம்
Advertisement

கொரோனா தடுப்பூசி : இவாங்கா அதிரடி!

admin சேலம் Published: September 13, 2020 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் விடுத்த சவாலை ஏற்றுக் கொண்ட இவாங்கா டிரம்ப் தொலைக் காட்சி நிலையத்திற்கே வந்து கோவிட் தடுப்பு மருந்தை எடுத்துக் கொள்வதாக தெரிவித்து உள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பின் மகளான இவாங்கா டிரம்ப், கொரோனா தடுப்பு மருந்து குறித்து எதிர்க்கட்சியினர் எழுப்பி வரும் சந்தேகங்களுக்கும் புகார்களுக்கும் பதிலடி கொடுக்கும் விதமாக இந்த சவாலை ஏற்றுக் கொண்டார்.

அப்போது போலியோ போன்ற தொற்று நோய்களுக்கு உலகம் தடுப்பு மருந்தைக் கண்டுபிடிக்க நீண்ட காலமானதையும் இவாங்கா சுட்டிக் காட்டினார்.

நிகழ்ச்சி நேரலையில் இவாங்காவை பேட்டி கண்ட தொகுப்பாளர் இவாங்கா தடுப்பு மருந்தை ஏற்றால் தானும் ஏற்பதாக கூறிய நிலையில் அந்த சவாலை இவாங்கா ஏற்றுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்