32°C
விளம்பரம்
Advertisement

நான் சிரித்தால் விமர்சனம்!

admin சேலம் Published: February 16, 2020 2 நிமிட வாசிப்பு Updated: February 17, 2020 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




சிரிப்பு என்பது மனித குணநலன்களின் ஒன்று. ஒரு குழந்தை பேசத் தொடங்குவதற்கு முன்பே சிரிக்கத் தொடங்குகிறது. சராசரியாக ஒரு குழந்தை நாளொன்றுக்கு 300லிருந்து 400 முறை வரை சிரிக்கிறது. ஆனால், சராசரி மனிதன் நாளொன்றுக்கு 15 முதல் 20 முறைதான் சிரிக்கிறான். அதனால் பல்வேறு உபாதைகளில் சிக்கி சின்னாபின்னமாகும் பலராலும் கவலைகளை மறப்பதற் காகவே ஒவ்வொரு நகரத்திலும் தற்போது நகைச்சுவை மன்றங்கள் ஆரம்பிக்கப் படுகின்றன. இந்த மன்ற உறுப்பினர்கள் வாரத்தில் ஒருநாள் கூடி, தங்கள் கவலையை மறந்து, சிரிப்பு மூட்டும் செய்திகளைக் கூறி மகிழ்கின்றனர். இப்படியாபட்ட சிரிப்பு மஹா மந்திரத்தை அடிப்படையாகக் கொண்டு முன்னரே மூன்றரை நிமிடங்கள் கொடுத்த ஒரு குறும்படத்தை முழு நீள படமாக மறுபடியும் கெக்க பிக்க’ என்று வழங்கி இருக்கிறார் புது முக இயக்குநர் ராணா.

டிகிரியைக் கூட முழுசாக முடிக்காமல் ஒரு ஐடி நிறுவனத்தில் பணிபுரியும் ஆதி அந்த ஆபீஸ் ஹெ ஆர் லேடியை லவ்வுகிறார். ஆனால் அவர் வாழ்க்கை பாதையில் வந்த திடீர் திருப்பம், ஆபிசில் பிரச்னை, காதலில் குழப்பம் என்று அடுத்தடுத்து வந்த மன உளைச்சலல் சிரிக்கும் நோய் (nervous laughter)-க்கு ஆளாகி விடுகிறார். அதிலும் தனக்கு சோகம் அல்லது வலி வந்தாலோ, யாருக்காக வாவது பரிதாபப்பட்டாலோ அழுவதற்கு பதிலாக ஆதிக்கு சிரிப்பு வந்து விடுமாம். இதனால், பிரச்னைகள் மேலும் பெரிதாகின்றன. இதற்கிடையே சென்னையின் இரு பெரும் காமெடி ரௌடிகளுக்கு இடையிலான பகையில் தெரியாமல் மாட்டிக்கொள்கிறார். ஆதியின் பிரச்னைகள் முடிந்ததா, காதல் வென்றதா என்பதே இயக்குனர் ராணாவின் ‘நான் சிரித்தால்’.

ஆதி, வழக்கம்போல் நடிக்க முயற்சி செய்திருக்கிறார். அப்பாவாக வரும் படவா கோபி படத்தை ட்ராமா-வாக்கி விட்டார். வில்லன்களில் ஒருவராக வரும் K.S.ரவிகுமார் மேக் அப் போட்ட தன் முகத்தைக் கண்ணாடியில் பார்க்கவே இல்லை போலிருக்கிறது.. ரவி மரியா, முனிஸ் காந்த் மற்றும் யோகி பாபு என ஒரு பட்டாளம் இருந்தும் எல்லோரும் இதை நாடகமாவே நினைக்க வைத்து விடுவது சோகம்தான்.

இசையில் ஒரு பாடலும் கவரவில்லை. முதலாக இப்படம் ‘கெக்க பெக்க’ என்கிற குறும்படத்தை அதே இயக்குனரே முழுநீள படமாக இயக்கியுள்ளார். குறும்படத்திலிருந்த சுவாரஸ்யம் படத்தில் கொஞ்சம் கூட இல்லை,

மொத்தத்தில் டைட்டிலை நம்பி போக வேண்டாம்

மார்க் 2.5 / 5

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்