32°C
விளம்பரம்
Advertisement

கேரளாவில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட அடுக்குமாடி குண்டு வைத்து தகர்ப்பு!

admin சேலம் Published: January 11, 2020 2 நிமிட வாசிப்பு Updated: January 13, 2020 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




கேரள மாநிலம் கொச்சி மரடு பகுதியில் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட 2 அடுக்குமாடி குடி யிருப்புகள் சுப்ரீம் கோர்ட் உத்தரவுப்படி இன்று குண்டு வைத்து தகர்க்கப்பட்டது.

கேரள மாநிலம் எர்ணாகுளம் பகுதியில் கடலோர ஒழுங்குமுறை மண்டல (சிஆர்இசட்) விதிகளை மீறியதற்காக மராடு அடுக்குமாடிக் கட்டிடங்களை இடிக்கும்படி, கடந்த மே 8-ம் தேதி உச்ச நீதி மன்றம் உத்தரவிட்டது. இதனை அடுத்து குடியிருப்பில் உள்ளவர்கள் யாரும் காலி செய்யாததால் கேரள அரசு கட்டிடத்தை இடிக்க இயலாத நிலை ஏற்பட்டது.

கடந்த செப்டம்பர் 27-ம் தேதி அன்று இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதி பதிகள் அருண் மிஸ்ரா மற்றும் ரவீந்திர பாட் ஆகியோர் அடங்கிய அமர்வு, மராடு அடுக்குமாடிக் குடியிருப்புகளை 138 நாட்களுக்குள் இடிக்க வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில அரசு தலா 25 லட்சம் ரூபாய் இடைக்கால இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

ரூ .25 லட்சம் இடைக்கால இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்த அந்த அடுக்குமாடி குடியிருப்புகளின் உரிமையாளர்கள், இடிப்பதைத் தடுப்பதற்கான கடைசி போராட்டம் வீணாக முடிவடைந்ததைத் தொடர்ந்து அக்டோபர் முதல் வாரத்தில் வளாகத்தை விட்டு வெளியேறினர்.

உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, மராடு நகராட்சியில் அடுக்குமாடிக் குடியிருப்புக் கட்டிடங்களை இடிக்கும் பணி நேற்று காலையில் தொடங்கியது. மராடு நகராட்சியில் அமைந்துள்ள ஹோலி ஃபெய்த் எச் 20 குடியிருப்புக் கட்டிடம் இன்று காலை 11.18 மணிக்கு இடிக்கப்பட்டது, அதைத் தொடர்ந்து ஆல்ஃபா செரீன் குடியிருப்பின் இரட்டைக் கோபுரங்கள் சில நிமிடங்களுக்குப் பிறகு இடிக்கப்பட்டன

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்