மாநிலங்களவைத் தேர்தல்: ஓரணியில் இணையும் தி மு க + தே மு தி க?

மாநிலங்களவைத் தேர்தல்: ஓரணியில் இணையும் தி மு க + தே மு தி க?

தமிழகத்தில் காலியாகவுள்ள ஆறு மாநிலங்களவை இடங்களில் ஐந்து இடங்கள் அதிமுக அணிக்கு உறுதியாகியுள்ளன.
இந்த இடங்களில் அதிமுக சார்பில் புதியவர்களுக்கு வாய்ப்பளிக்க திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.அதிமுக அணியால் ஐந்து இடங்கள் பூர்த்தியாகும் நிலையில், ஆறாவது இடத்துக்காக நிறுத்தப்படும் வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக அல்லது தேமுதிகவால் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டு அவருக்கு பரஸ்பரம் இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தால் அவரது வெற்றி உறுதி செய்யப்படும் என்பதால் தி மு க மற்றும் தே மு தி க ஓரணியில் இணையும் என்று எதிர்பார்க்கப்படுகிற்து
bala-cartoons-
தமிழகத்திலுள்ள மாநிலங்களவை உறுப்பினர்கள் எஸ்.அமீர் அலி ஜின்னா, என்.பாலகங்கா, டி.கே.ரங்கராஜன், வசந்தி ஸ்டான்லி, ஜி.கே.வாசன், ஜெயந்தி நடராஜன் ஆகியோரின் பதவிக்காலம் ஏப்ரல் 2 ஆம் தேதியுடன் நிறைவடைகிறது.
இந்த நிலையில், ஆறு இடங்களுக்கும் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அதன்படி, தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் வரும் 21 ஆம் தேதி தொடங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய ஜனவரி 28 கடைசி நாளாகும்.வேட்புமனுக்களின் பரிசீலனை வரும் 29 ஆம் தேதியும், மனுக்களை வாபஸ் பெற 31 ஆம் தேதியும் கடைசியாகும். தேர்தலில் வாக்கெடுப்பு தேவையெனில் பிப்ரவரி 7 ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறும்.

மார்க்சிஸ்ட் கட்சிக்கு ஆதரவு: தமிழக சட்டப் பேரவையில் அதிமுகவுக்கு 151 இடங்கள் உள்ளன. தேமுதிகவுக்கு 28, திமுகவுக்கு 23, மார்க்சிஸ்ட் கட்சிக்கு 10, இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 8 இடங்கள் உள்ளன. ஒரு மாநிலங்களவை உறுப்பினரைப் பெற 34 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவை. அதன்படி, 136 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவுடன் நான்கு மாநிலங்களவை உறுப்பினர் இடங்கள் ஆளும் அதிமுகவுக்கு உறுதி செய்யப்பட்டுள்ளன. மீதம் 15 எம்.எல்.ஏ.க்களின் வாக்கு உபரியாக இருக்கும்.

இந்த உபரி எம்.எல்.ஏ.க்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஆதரவு அளிக்க அதிமுக தலைமையால் கேட்டுக் கொள்ளப்படுவார்கள் எனத் தெரிகிறது. இந்த 15 எம்.எல்.ஏ.க்கள் மற்றும் இடதுசாரிகளின் 18 எம்.எல்.ஏ.க்களைச் சேர்த்தால் 33 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு மார்க்சிஸ்ட் அல்லது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியால் நிறுத்தப்படும் வேட்பாளருக்குக் கிடைக்கும்.இதனுடன் வெற்றிக்குத் தேவையான ஒரு எம்.எல்.ஏ.வின் வாக்கு பார்வர்டு பிளாக் மூலமாக இடதுசாரி வேட்பாளருக்குக் கிடைக்கும். இதனால், அதிமுக அணிக்கு ஐந்து இடங்கள் கிடைப்பது உறுதி செய்யப்பட்டு விடும்.

ஆறாவது இடம் யாருக்கு? கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் ஆறாவது இடம் யாருக்கு என்ற கேள்வி எழுந்தது. அதே போன்ற கேள்வி இந்தத் தேர்தலிலும் எழும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அதிமுக அணியால் ஐந்து இடங்கள் பூர்த்தியாகும் நிலையில், ஆறாவது இடத்துக்காக நிறுத்தப்படும் வேட்பாளர் எந்தக் கட்சியைச் சேர்ந்தவராக இருப்பார் என்ற கேள்வி எழுந்துள்ளது. திமுக அல்லது தேமுதிகவால் ஒரு வேட்பாளர் நிறுத்தப்பட்டு அவருக்கு பரஸ்பரம் இரு கட்சிகளும் ஆதரவு தெரிவித்தால் அவரது வெற்றி உறுதி செய்யப்படும்.

ஆனால், தேமுதிகவுடன் மக்களவைத் தேர்தல் தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையும் நடத்தப்படவில்லை என்றும் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து முடிவெடுக்கவில்லை எனவும் திமுக தலைவர் கருணாநிதி வியாழக்கிழமை (ஜன. 16) கூறியுள்ள நிலையில் அந்த ஆறாவது இடம் யாருக்கு என்ற கேள்வி கடந்த மாநிலங்களவைத் தேர்தலைப் போன்றே பரபரப்புக்கு வித்திட்டுள்ளது என்றாலும் தி மு க மற்றும் தே மு தி க ஓரணியில் இணையும் பெச்சு வார்த்தை ஆர்ம்பமாகி விட்டது என்றே கூற்ப்படுவதுடன் தெ மு தி க சார்பில் விஜ்ய்காந்த் மைத்துனர் சதிஷ் போட்டியிடக் கூடும் என்றும் தெரிய வருகிற்து..

கார்ட்டூன் உதவி: பாலா