32°C
விளம்பரம்
Advertisement

நடிகர் சத்யராஜ் தன் மகன் சிபியுடம் நடிக்கும் புதுப் படம் தொடக்கம்!

admin சேலம் Published: August 23, 2019 2 நிமிட வாசிப்பு Updated: August 25, 2019 Running News2
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



நடிகர் சிபிராஜ் தனது சினிமா பயணத்தை வெகு கவனமாக தேர்ந்தெடுத்து  தன் இருப்பை காட்டி  வருகிறார். இந்நிலையில், வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகும் தனது அடுத்த படத்தினை அறிவித்துள்ளார். தமிழின் முன்னணி நடிகரான சத்யராஜ் தன் மகன் நடிகர் சிபிராஜுடன் இணைந்து
‘ஜாக்சன் துரை’ வெற்றிப்படத்தில் நடித்திருந்தார். இப்போது இந்தக் கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது.

கடந்தாண்டின் கவனிக்கதக்க படைப்பான “சத்யா” படத்தின் மிகப்பெரிய வெற்றிக்கு பிறகு இயக்கு நர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தியும், நடிகர் சிபிராஜும் புதிய கதைக்களம் கொண்ட ஒரு திரைப்படத்தில் இணைகிறார்கள். முற்றிலும் புதுவித திரைக்கதை கொண்ட இப்படத்தினை தயாரிப்பாளர்கள் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் தயாரிக்கிறார்.

இப்படத்தில் நடிகர்கள் சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர் நடிக்க உள்ளார்கள். சைமன் கே.கிங் இசையமைக்க உள்ளார்.  படத்தின் மற்ற  தொழில்நுட்பக்குழு உறுப்பினர்கள்  தேர்வு தற்போது நடைபெற்று வருகிறது. இப்படம் படப்பிடிப்பு வரும் நவம்பரில் தொடங்கப்பட்டு ஒரே கட்டமாக ஜனவரியில் முடிக்கப்பட உள்ளது.

கிரியேட்டிவ்  எண்டர்டெய்னர் சார்பில் தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன் இப்படத்தினை தயாரிக்க உள்ளார்கள்.

படக்குழு விவரம் :

வகைமை : சஸ்பென்ஸ் திரில்லர்
நடிகர்கள் : சிபிராஜ், சத்யராஜ், நாசர் மற்றும் பலர்.
தயாரிப்பு நிர்வாகம் : சரவணன்.எஸ்.
தயாரிப்பு மேற்பார்வை : CA ஜி.கோகுல்
இசை : சைமன் கே.கிங்
இயக்கம் : பிரதீப் கிருஷ்ணமூர்த்தி
தயாரிப்பாளர்கள் : Dr. ஜி.தனஞ்செயன் மற்றும் லலிதா தனஞ்செயன்
தயாரிப்பு நிறுவனம் : கிரியேட்டிவ் எண்டர்டெயினர்ஸ் & டிஸ்ட்ரிபியூட்டர்ஸ்.

மக்கள் தொடர்பு : தர்மதுரை.N & ரேகா

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்