நாய்கள் யோசிப்பதை கண்டுபிடிக்கும் Headset!வீடியோ

நாய்கள் யோசிப்பதை கண்டுபிடிக்கும் Headset!வீடியோ

நாய்களுடைய யோசிப்பதை கண்டறிந்து அதனடிப்படையில் அதனுடைய வார்த்தைகளை மொழி பெயர்க்கும் Headset ஒன்று கண்டு பிடிக்கப் பட்டுள்ளது. இது நாய்களுடைய மூளையை ஸ்கேன் செய்து வார்த்தைகளை மொழிப் பெயர்க்கின்றது. பெரும்பாலும் மனிதனுடைய செயற்பாடு எதுவென நாய்களால் அறிந்து கொள்ள முடியும். ஆனால் நாய்களுடைய சிந்தனையை மனிதனால் இதுவரை புரிந்து கொள்ள முடியாமலிருந்தது. இதை கவனத்தில் கொண்டு நாய்களின் மனதில்தோன்றும் எண்ணங்களை மொழிபெயர்ப்பு செய்யும் நோக்கில் இந்த Headset வடிவமைக்கப்பட்டுள்ளது.
tec - dog headset 28
இத் நவீன் தொழில்நுட்பமானது சமூக மற்றும் கண்டுபிடிப்பு அமைப்பு (NCID மற்றும் ஸ்காண்டிநேவிய ஆராய்ச்சி மையம் போன்ற அமைப்புகளின் ஆலோசனையில் அபிவிருத்தி செய்யப்படடுள்ளது.

புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த Headset வித்தியாசமான மூன்று தொழில்நுட்ப பகுதிகளை கொண்டுள்ளது. இது அற்புதமானது, என்னைத் தனியாக விட்டுவிடுங்கள், எனக்கு களைப்பாக இருக்கிறது, நீங்கள் யார்?, ஏன் நீங்கள் இங்கிருந்து செல்கிறீர்கள் என நாய்கள் சிந்திப்பதை இந்த Headset ஊடாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இந்தத் தொழில்நுட்பக் குழுவில் அங்கம் வகிக்கும் எரிக் கால்டெரொன் என்பவர் இது குறித்து “மனிதர்களின் மூளையை ஆராய்ச்சி செய்யும் பல்வேறு தொழில்நுட்பங்கள் தொடர்பில் தொடர்ச்சியாக பேசப்பட்டு வருகின்றது. எனினும் மனிதனின் நெருங்கிய நண்பனான நாயின் சிந்தனைத் திறன் மற்றும் அவை எந்த சந்தர்ப்பத்தில் எவ்வாறான எண்ணப்பாடுகளை கொண்டிருக்கின்றன என்பது தொடர்பில் இதுவே முதல் தடவையாக ஆராயப்படுகிறது” எனத் தெரிவித்துள்ளார்.

வீடியோ பார்க்க:https://www.youtube.com/watch?v=-46wBstlLMU

New Gadget Translates What Your Dog is Thinking
**************************************************************
Dog owners often have an incredible affinity with their canine companions, but a prototype technology could soon take pet-to-human communication to the next level.
No More Woof is a headset that uses brain-scanning technology to detect a dog’s thought patterns, analyse them and translate them into the spoken word.

@Nagoorkani Kader Mohideen Basha