‘தமிழகக் காடுகளை அழிக்கும் ஐஐடி மெட்ராஸ்,,,!

‘தமிழகக் காடுகளை அழிக்கும் ஐஐடி மெட்ராஸ்,,,!

ஐ ஐ டி வளாகத்தில் 2001இல் இருந்து 2013 வரை கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் வெட்ட பட்ட மரங்கள் சட்டத்திற்கு புறம்பான செய்யப்பட்டது என்ற குற்றசாட்டை விசாரித்து தெளிவுபடுத்தும் வரை புது கட்டடங்கள் கட்டுவதை நிறுத்த வேண்டும் என்று சென்னையை சார்ந்த சமூக ஆர்வலர் இன்று கோரிக்கை இட்டார். “காட்டில் ஒரு நகரம்: ஐ ஐ டி மெட்ராஸின் பிறப்பு மற்றும் வளர்ச்சி” என்ற சென்னை ஆதரவு குழுவின் அறிக்கை வெளியீட்டில் நகர சமூக ஆர்வலர்கள் கிண்டி பகுதியில் உள்ள காடுகளின் ஆரோக்கியம் பொது அக்கறைக்கான ஒரு விஷயம் ஆகும் என்று கூறினார். இயற்கை சூழல் மீது ஐ ஐ டி-இன் இரக்கமற்ற அலட்சியத்தை கண்டு ஆர்வலர்கள் அதிர்ச்சி அடைந்தார்.

2001-லிருந்து 2013 வரை ஐ ஐ டி மெட்ராஸ் 52 acre காட்டு பரப்பில் இருந்த 8000 மரங்களை வெட்டி 39 கட்டிடங்கள் அவ்வளாகத்தின் எளிதாக பாதிக்ககூடும் சுழலில் கட்டியிருப்பதாக அறிக்கை கூறியுள்ளது. ஐ ஐ டி-இன் திட்டப்படி மாணவர் எண்ணிக்கையை இப்போது இருக்கும் 5500-இலிருந்து 8000 வரை கூட்டுவதற்கு தேவையான கட்டமைப்புகளுக்கு மேலும் 58 acre காட்டு பரப்பிலுள்ள 10000-திறக்கும் மேற்பட்ட மரங்கள் வெட்டப்படும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

ஐ ஐ டி மெட்ராஸ்-இன் வளாகம் கிண்டி காடுகளிலிருந்து 1958-இல் செதுக்கபட்டது. இதில் அரிய தெற்கு முள் காடுகளின் கடைசி பரப்புகள் மற்றும் கலைமான், பண்கோளின், உடும்பு, நட்சத்திர ஆமைகள் போன்ற மிகவும் ஆபத்தில் இருக்கும் விலங்குகளும் காணப்படும்.

இன்று வெளியிடபட்ட அறிக்கை ஐ ஐ டி-யில் கட்டப்பட்ட கட்டிடங்களின் சட்ட அந்தஸ்த்தை கேள்வி கேட்டுள்ளது. நிறுவன பகுதிகளில் கட்டப்படும் கட்டிடங்களுக்கு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திடமிருந்து ஒப்புதலும், ஒரு சில பெரிய கட்டிட பணிகளுக்கு சுற்று சூழல் உரிமமும் தேவை படும். இது போன்ற திட்டங்கள் ஒரு தேசிய பூங்காவின் 10 km தூரதிருக்குள் வரும் பட்சத்தில், அதற்க்கு கூடுதல் ஒப்புதல் உச்ச நீதி மன்றத்திடம் மற்றும் வனவிலங்குகளுக்கான தேசிய குழுவிடம் இருந்து பெற வேண்டும். இதில் எந்த ஒப்புதலோ, உரிமமோ பெற பட்டதாக தெரியவில்லை என்று அறிக்கை அறிவுறுத்துகிறது.
iit_chennai 28
அறிக்கை வெளியீட்டின் அதே நேரத்தில் கிட்டத்தட்ட 60 மரங்களை வெட்டி புது B -டைப் அபார்ட்மெண்ட்டுகல் கட்டுவதற்கான பணிகள் நடந்துகொண்டு இருக்கின்றன. இது மட்டும் இல்லாமல், அடுத்த மாதம் நடை பெற இருக்கும் சாரங் என்ற மாணவர் விழாவில் 50,000-திறக்கும் மேல் பார்வையாளர்கள் மற்றும் 13000-திறக்கும் மேல் வாகனங்கள் 5 நாட்களில் வர இருக்கு. விழாவை ஒட்டிய நிகழ்சிகளின் ஓசை மற்றும் ஒளியினாலும் சூழல் பாதிப்பு அடையும்.

அறிக்கையின் நோக்கம் ஐ ஐ டி-யின் வளர்ச்சியை எதுற்பது அல்ல என்று அறிக்கையின் ஆசிரியர்கள் தெளிவுபடுத்தியுள்ளார். மாறாக, ஐ ஐ ட-யும் சட்டப்படி ஒப்புத்தல்கள் பெற்று சுற்று சுழலுக்கு கேடு விளைவேக்காத வகையில் வளர்ச்சி திட்டங்களை ஒரு துணை வளாகத்தில் செயல்படுத்த வலியுறுத்துவது தான் இவ்வறிக்கையின் நோக்கம் என்று ஆசிரியர்கள் கூறினார்.

இதை சம்மந்தமாக 7 சுற்று சூழல் ஆர்வலர்கள் மத்திய மானிட வளத்துறை அமைச்சர், CMDA-வின் துணை தலைவர், ஐ ஐ டி-மெட்ராஸின் இயக்குனர், ஐ ஐ டி மெட்ராஸின் ஆளும் குழுவின் தலைவர், மற்றும் வனவிலங்குகளுக்கான தேசிய குழுவிற்கு கடிதம் எழுதியுள்ளார். கடிதத்தில் ஆர்வலர்கள் ஐ ஐ டி-இன் மீது குற்ற சாட்டுகளை விசாரித்து நடவடிக்கைகள் எடுக்கும்மாறு கேட்டுள்ளார்.
iit_chennai 2 -28.
ஐ ஐ டி-மெட்ராஸின் வெளிபடைதன்மை இல்லாத கலாச்சரத்தினால் ஆய்வு மிகவும் வரையறுக்கப்பட்டதாக அறிக்கையின் ஆசிரியர்கள் கூறியுள்ளார்.

For more information, contact:
Nityanand Jayaraman. 9444082401

#Poovulagin Nanbargal ·

Related Posts