திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் : கேயார் அணி வெற்றி
திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கேயார் அணி வெற்றி பெற்று உள்ளது. 449 வாக்குகள் பெற்று திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தலைவராக கேயார் தேர்வு செய்யப்பட்டார். துணைத் தலைவர்களாக போஸ், பிஜி தியாகராஜன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட ராதாகிருஷ்ணன் வெற்றி பெற்றார். தயாரிப்பாளர் சங்க செயலாளர்களாக சிவா, ஞானவேல் ராஜா ஆகியோர் தேர்வாகினர்.
![]()
சென்னை நந்தனம் ஓய்எம்சிஏவில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் 85 சதவீத வாக்குள் பதிவானது. வாக்களிக்க தகுதி பெற்ற 832 உறுப்பினர்களில் 708 உறுப்பினர்கள் வாக்களித்தனர். ஓய்வி பெற்ற நீதிபதிகள் வெங்கட்ராமன், ஜெகதீசன் ஆகியோரின் மேற்பார்வையில் தேர்தல் நடைபெற்றது. தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் முதல் முறையாக மின்னணு எந்திரம் மூலம் வாக்குப்பதிவு நடைபெற்றது என்பது குறிப்பிடதக்கது.
வெற்றி பெற்றதும் செய்தியாளர்களிடம் பேசிய கேயார், முன்னாள் சங்க பொறுப்பாளர்களின் நிர்வாக திறமையின்மையே இன்றைய தேர்தலில் நாங்கள் வெற்றிப்பெற காரணம். தயாரிப்பாளர் சங்கம் உறுப்பினர்களின் நலனுக்காக எப்போதும் ஒரு அணியாகவே செயல்படும் என்றும், வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன் என்றும் கூறினார்.
கோடங்கி


