32°C
விளம்பரம்
Advertisement

நல்ல மருமகளாக, மனைவியாக இருப்பதை கற்றுக் கொடுப்பதற்காகவே புது படிப்பு!

admin சேலம் Published: September 24, 2018 2 நிமிட வாசிப்பு Updated: September 25, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




திருமணமான எல்லா பெண்ணும் புகுந்த வீட்டில் தனது கணவரின் உறவினர்கள் தன்னிடம் கொள்ளை பாசத்துடன் நடந்து கொள்ள வேண்டும் என்றே விரும்புவாள். இதே போன்ற உணர்வை தான் கணவரது உறவினர்களும் கொண்டிருப்பார்கள்.  வீட்டிற்கு வரும் மருமகள் புகுந்த வீட்டில் நல்லுறவை ஏற்படுத்துவாள் என்று நம்புவார்கள். திருமணம் என்பது நமது வாழ்வில் ஒரு பகுதியாக இருக்கின்றது. அந்த வகையில் ஒரு பெண் பிறந்த வீட்டை விட்டு புகுந்த வீட்டிற்கு செல்லும் போது, கணவரின் தாயிடம் பழக நேரிடும். இந்த மாமியார் – மருமகள் உறவில் எந்த ஒளிவு மறைவும் கிடையாதுதான்.ஆனால் இது மிகவும் கடினமான ஒன்று என்பது நாம் அனைவரும் அறிந்த ரகசியம் தான். குறிப்பாக, மாமியார் என்றாலே சில சொல்ல முடியாத விஷயங்கள் இருக்கத் தான் செய்யும். அதனால் அந்த சந்தர்ப்பத்தை புரிந்து கொண்டு நடப்பதால், வாழ்க்கையை நல்ல முறையில் வாழலாம். ஆனால் நிறைய குழப்பங்களும், சர்ச்சைகளும் வருவது இயல்பே. இந்நிலையில்தான் போபாலில் உள்ள பர்கதுல்லா பல்கலைக் கழகத்தில் ஒரு பெண் நல்ல மருமகளாக, மனைவியாக இருப்பதை கற்றுக் கொடுப்பதற்காகவே புது படிப்பு தொடங்கப் பட உள்ளது.

2019ம் ஆண்டு முதல் இந்தப் படிப்பு தொடங்கப்படவுள்ளதாகவும் முதல் வருடத்தில் 30 இடங்கள் இந்தப் படிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது. சமூக சேவை, உளவியல் மற்றும் பெண்கள் பாதுகாப்புத்துறை சார்பில் இது சொல்லிக் கொடுக்கப் படுகிறது. குடும்பத்தில் பிரச்னைகள் ஏற்பட்டு உடைபடாமல் ஒற்றுமையுடன் இருப்பதை உறுதி செய்யும் நோக்கில் இப்படிப்பை தொடங்கியுள்ளதாக பர்கதுல்லா பல்கலைக் கழகம் கூறுகிறது.

“இது மூன்று மாத படிப்பு. ஆண்கள், பெண்கள் இருபாலரும் இதில் பங்கு பெறலாம். பிளஸ்-2 படிப்பு இதற்கு தகுதியானது. வயது வரம்பு எதுவுமில்லை. சமுதாயத்தை முன்னோக்கி எடுத்துச் செல்லும் பொருட்டு இந்தப் படிப்பை தொடங்கவுள்ளோம். இளைய தலைமுறை இளைஞர்களுக்கு இது உதவும்” என்கிறார் பர்கதுல்லா பல்கலைக் கழக துணை வேந்தர் குப்தா.

இந்தப் படிப்பு குறித்த தகவல் வெளியான பின்னர்,‘பெண்களுக்கு மட்டும் ஏன் இந்தப் படிப்பு?’,‘படிப்பு ஆபாசமாக இருக்கும்’ என்பது உள்ளிட்ட சில விமர்சனங்கள் எழுந்தன. இதனையடுத்து, இந்தப் படிப்பில் பர்கதுல்லா சில மாற்றங்களை கொண்டு வந்தது. அதாவது, ஆண்கள் மற்றும் பெண்கள் இருதரப்பினருக்கும் சிக்கல் இல்லாமல் மாற்றம் செய்யப்பட்டது. நல்ல கணவன், மனைவியாக, நல்ல மாமியார், மாமனாராக இருப்பது எப்படி? என்ற அடிப்படையில் பாடத்திட்டங்களை உருவாக்க தற்போது முடிவு செய்யப்பட்டுள்ளதாம்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்