32°C
விளம்பரம்
Advertisement

ட்ரோன்கள் பறக்க புதிய விதிமுறைகள் – இந்திய விமான போக்குவரத்து வெளியிட்டது!

admin சேலம் Published: August 28, 2018 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ட்ரோன் எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை இயக்குவதற்கு புதிய விதிமுறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது.! அதன்படி 250 கிராம் எடை கொண்ட, 50 அடி உயரத்தில் பறக்கும் நானோ ரகங்களுக்கு எந்த அனுமதியும் வாங்கத் தேவை யில்லை. 200 அடி உயரத்தில் பறக்கும் மைக்ரோ 450 அடி உயரத்தில் பறக்கும் சிறிய ரக ட்ரோன் களுக்குக் கண்டிப்பாக உள்ளுர் போலீஸ் அனுமதி தேவை. ட்ரோன்களைப் பதிவுசெய்யவும், பறப்பதற்கு அனுமதி வாங்கவும் தனி ஆப் உருவாக்கப்பட்டுள்ளது.

ட்ரோன் எனப்படும் சிறிய ரக ஆளில்லா விமானங்களை பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதி முறைகளை மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் வெளியிட்டுள்ளது. இதன்படி நானோ ரகத்தைத் தவிர மற்ற அனைத்து ட்ரோன்களை வாங்க கண்டிப்பாக மத்திய ட்ரோன் இயக்குநரகத் திடம் அனுமதி பெற வேண்டும். அத்துடன் உள்ளூர் காவல் துறையினரிடம் 24 மணி நேரத்துக்கு முன்னதாகத் தகவல் அளிக்க வேண்டும். நானோ மற்றும் தேசிய தொழில்நுட்ப ஆய்வு மைய ட்ரோன்களைத் தவிர, மற்றவற்றுக்குத் தனி அடையாள எண் (UIN) வழங்கப்படும்.

ட்ரோன்கள் பகல் நேரத்தில் மட்டுமே இயக்கப்பட வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது. மேலும் இவற்றை பார்வை வரம்பு தொலைவிற்கு அதாவது 450 மீட்டர் உயரத்தில் மட்டுமே இயக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், 250 கிராம் முதல் 150 கிலோ வரை டுரோன்கள் 5 வகையாக பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 250 கிராம் முதல் 2 கிலோ வரையிலான நானோ மற்றும் மைக்ரோ டிரோன்கள் குழந்தைகள் விளையாட்டு பொம்மையாக பயன்படுத்த அனுமதிக்கப் படுகிறது. அதற்கு மேற்பட்ட எடை கொண்ட டிரோன்களை பயன்படுத்த முறையாக பதிவு செய்து அடையாள எண் பெற வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

18 வயது பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும், குறைந்தபட்சம் 10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி யுடன் ஆங்கில அறிவும் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ட்ரோனை இயக்கு பவர்கள், ஒவ்வொரு முறையும் பறக்கும் முன் அனுமதி பெற வேண்டும். தற்போதைய கொள்கையில், ட்ரோன்கள் வழியாக உணவுப் பொருள்கள் டெலிவரி செய்ய அனுமதியில்லை. இரண்டாவது கொள்கையில், உணவுப் பொருள்கள் சப்ளை செய்ய அனுமதி அளிக்கப்படலாம்.

வரும் டிசம்பர் மாதம் முதல் இந்த விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. மேலும், இந்த விதிமுறைகள் வரும் டிசம்பர் 1, 2018 முதல் நடைமுறைக்கு வருவதாக மத்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளனர்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்