32°C
விளம்பரம்
Advertisement

கர்நாடகா : குமாரசாமி நம்பிக்கை வாக்கெடுப்பில் கெலிச்சிட்டார்1

admin சேலம் Published: May 25, 2018 2 நிமிட வாசிப்பு Updated: May 26, 2018 Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




ஒரு வழியாக கர்நாடக சட்டசபையில் முதல்வர் குமாரசாமி தலைமையிலான மதச்சார்பற்ற ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி அரசு நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றுள்ளது.

கர்நாடக சட்டசபையில் இன்று நடத்தப்பட்ட நம்பிக்கை வாக்கெடுப்பில், குமாரசாமி தலைமையிலான மஜத – காங்கிரஸ் கூட்டணி அரசுக்கு ஆதரவாக 116 உறுப்பினர்கள் வாக்களித்தனர். இதையடுத்து நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற 112 வாக்குகள் தேவை இந்நிலையில் குமார சாமி தாக்கல் செயத நம்பிக்கை கோரும் தீர்மானத்துக்கு ஆதரவாக 116 வாக்குகள் கிடைத்தன. கூட்டணி வாக்குகள் சிதறாமல் குமாரசாமிக்கு கிடைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. நீண்ட குழப்பத்துக்குப் பிறகு மஜத மாநிலத் தலைவர் குமாரசாமி நேற்று முன்தினம் முதல்வராக பதவியேற்றார். பெரும்பான்மையை நிரூபிக்க ஆளுநர் வஜுபாய் வாலா 15 நாள் கால அவகாசம் வழங்கினார். ஆனால் ஒருநாள் இடைவெளியில் பெரும்பான்மையை நிருபிக்க குமாரசாமி முடிவு செய்தார். அதன்படி. கர்நாடக சட்டப்பேரவை இன்று காலை கூடியது.

முதல்கட்டமாக, சபாநாயகர் தேர்தல் நடைபெற்றது. காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் சீனிவாசப்பூர் தொகுதி எம்எல்ஏ கே.ஆர்.ரமேஷ் குமாரும், பாஜக சார்பில் போட்டியிடும் ராஜாஜி நகர் தொகுதி எம்எல்ஏ சுரேஷ் குமாரும் போட்டியிட்டனர்.
சபாநாயகர் தேர்வு நடைபெறுவதற்கு சற்று முன்பாக பாஜக வேட்பாளர் போட்டியில் இருந்து விலகினார். இதையடுத்து, காங்கிரஸ் வேட்பாளர் ரமேஷ் ஏகமனதாக தேர்வு செய்யப்பட்டார்.

இதைத்தொடர்ந்து பிற்பகலில் அவை மீண்டும் கூடியது. முதல்வர் குமாரசாமி நம்பிக்கை வாக்குகோரினார். பெரும்பான்மைக்கு 111 உறுப்பினர்களின் ஆதரவு தேவை.

இதில் குமாரசாமிக்கு 78 காங்கிரஸ் உறுப்பினர்கள், 36 மஜத உறுப்பினர்கள், 1 பகுஜன் சமாஜ் உறுப்பினர் மற்றும் 2 சுயேச்சைகளின் ஆதரவு அளித்தனர். அப்போது பாஜக எம்எல்ஏக்கள் 104 பேரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதனால் குரல் வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு வெற்றி பெற்றதாக சபாநாயகர் அறிவித்தார்.

முன்னதாக எதிர்கட்சித் தலைவராக பாஜக மூத்த தலைவரும், முன்னாள் முதல்வருமான எடியூரப்பா தேர்வு செய்யப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்