ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!

ரூபாய் மதிப்பு வீழ்ந்ததற்குக் காரணம் வளர்ந்த நாடுகளின் போக்குதான்! – ஜி–20 மாநாட்டில் பிரதமர் குற்றச்சாட்டு!

வளர்ந்த நாடுகளின் போக்கால்தான் ரூபாய் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததாகவும் வருங்காலத்தில், இந்தியாவில் இன்னும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை முன்னிலும் அதிகமாகவே அமல்படுத்தப்படும் என்றும் ஜி–20 மாநாட்டில் பிரதமர் மன்மோகன்சிங் தெரிவித்துள்ளார்.

ரஷியாவில் செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் ஜி–20 நாடுகள் உச்சி மாநாடு நடைபெற்றது. அதில், பிரதமர் மன்மோகன்சிங் கலந்து கொண்டார். அமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உள்ளிட்ட உலக தலைவர்களின் முன்னிலையில், பிரதமர் மன்மோகன்சிங் உரையாற்றினார்.
sep 6 - p m in g8 MINI
உலகின் மொத்த உற்பத்தியில் 80 சதவீதத்தை உள்ளடக்கிய முக்கிய 20 நாடுகளைக் கொண்டது ஜி-20 அமைப்பாகும். பொருளாதார அம்சங்கள் மற்றும் ஒத்துழைப்பு குறித்து விவாதிக்கும் வகையில் ஜி20 அமைப்பு 1999ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.இதில் அமெரிக்கா, பிரிட்டன், ரஷ்யா, சீனா, இந்தியா உள்ளிட்ட 19 நாடுகள் மற்றும் ஐரோப்பிய யூனியன் ஆகியவை உறுப்பினர்களாக உள்ளன. இந்த ஜி20 நாடுகள் கூட்டமைப்பை உருவாக்கும் யோசனையை முன்மொழிந்தவர் கனடாவின் முன்னாள் பிரதமர் பால் மார்ட்டின். ஜி20 நாடுகளின் தலைவர்கள் ஆண்டிற்கு இருமுறை கூடிப்பேசும் நடைமுறை 2008 ஆம் ஆண்டு தொடங்கியது.

2011 நவம்பரில் கேன்ஸில் நடந்த ஜி-20 நாடுகளின் தலைவர்களின் மாநாட்டிற்கு பின்னர் இத்தகைய மாநாடு ஆண்டிற்கு ஒரு முறை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டது. தற்போது ரஷியாவின் செயின்ட் பீட்டர்ஸ்பெர்க்கில் நடைபெறும் மாநாடானது எட்டாவது ஜி 20 நாடுகளின் தலைவர்கள் மாநாடாகும். அடுத்த ஆண்டு இம்மாநாடு ஆஸ்திரேலியாவிலும், 2015 ஆம் ஆண்டு துருக்கியிலும் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இப்போது மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மன்மோகன் சிங்”இந்தியா கடந்த சில வாரங்களாக ரூபாய் மதிப்பு வீழ்ச்சியால் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கு நடப்பு கணக்கு பற்றாக்குறை அதிகமாக இருப்பது ஒரு காரணம். அன்னிய முதலீடு வந்தால், இதை சரிக்கட்டி விடலாம். அன்னிய முதலீடு திடீரென நின்று விடும்போதுதான் பிரச்சினை ஆகிவிடுகிறது.நடப்பு கணக்கு பற்றாக்குறையை நடப்பு நிதியாண்டில் 3.7 சதவீதமாக குறைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிறகு, அதை 2.5 சதவீதமாக குறைக்க திட்டமிட்டுள்ளோம்.

மேலும், வளர்ந்த நாடுகள் மரபுக்கு அப்பாற்பட்டவகையில், பொருளாதார ஊக்கச்சலுகைகளை அளித்தன. பிறகு திடீரென அந்த சலுகைகளை வாபஸ் பெற்றன. இதனால், எதிர்விளைவு ஏற்பட்டு, இந்தியா போன்ற நாடுகளில் கரன்சி மதிப்பில் ஏற்றத்தாழ்வு ஏற்பட்டது. பொருளாதார ஊக்கச்சலுகைகளை படிப்படியாகத்தான் வாபஸ் பெற்றிருக்க வேண்டும்.

கரன்சி மதிப்பு ஊசலாட்டத்தை சீர்செய்ய ஜி–20 அமைப்புக்குள் விரிவான ஆலோசனை நடத்தப்பட வேண்டும். வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சிக்கு ஜி–20 நாடுகள் அமைப்பு, கூட்டு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.இந்தியா ஏற்கனவே பொருளாதார சீர்திருத்தங்களை மேற்கொண்டு வருகிறது. வருங்காலத்தில், மேலும் பல சீர்திருத்த நடவடிக்கைகள் எடுக்கப்படும். மானிய குறைப்பு, வரி சீர்திருத்தம் போன்றவை அமல்படுத்தப்படும்.”என்று மன்மோகன்சிங் பேசினார்.

Manmohan Singh wants better policy coordination from G20 members
*********************************************************************************
Prime Minister Manmohan Singh urged leaders at the G20 Summit to pay more attention to monetary policy coordination, highlighting the difficulties faced by emerging markets and India’s experience in particular, in the wake of an impending switch in US Federal Reserve’s approach to fiscal stimulus.