32°C
விளம்பரம்
Advertisement

மீண்டும் மின்வெட்டு – வழக்கம் போல் சென்னை தப்பியது!

admin சேலம் Published: November 15, 2013 1 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




தமிழகத்தில் பல மாதங் களாக நீடித்தது மின் வெட்டு. கடந்த ஜூன் மாதம் முதல் தென்மேற்கு பருவ மழை காரணமாக காற்றாலைகளில் அதிக அளவு மின் உற்பத்தி கிடைத்தது. இதனால் மின்வெட்டு பிரச்னைக்கு சற்று தீர்வு கிடைத்தது. கடந்த ஒரு வாரமாக மின்வெட்டு மீண்டும் தலைதூக்கியுள்ளது. தினமும் ஒரு மணி நேரம் என்று இருந்த மின்வெட்டு தற்போது படிப்படியாக உயர்ந்து நகர பகுதியில் தினமும் 4 மணி நேரம் மின்வெட்டு செய்யப்படுகிறது.
nov 15 -power-cut-in-tamilnadu.
மேலும் கிராம புறங்களில் தினமும் 6 மணி நேர மின்வெட்டு அமல்டுத்தப்படுகிறது. இதனால் பொதுமக்கள் பெரிதும் சிரமப்பட்டு வருகின்றனர். கோயம்புத்தூர், திருப்பூர், ஈரோடு, கரூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மக்கள் மின்சாரத்தை நம்பி தான் தொழில் செய்கின்றனர். தற்போது ஏற்பட்டுள்ள 6 மணி நேர மின்வெட்டால் அப்பகுதியை சேர்ந்த பல்வேறு தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இரவு நேரங்களில் மின்வெட்டு ஏற்படுவதால் தமிழகம் முழுவதும் சமூக விரோத செயல்கள் அதிகரித்துள்ளது. மின்சாரம் இல்லாத சமயத்தில் குற்றங்கள் அதிகரித்துள்ளது. தொடர் மின்வெட்டால் அரசு மருத்துவமனைகளில் நோயாளிகள் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் மின்வெட்டு காரணமாக பல்வேறு மருத்துவமனைகளில் பல அறுவை சிகிச்சைகள் நிறுத்தி வைக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இரவு நேரம் ஏற்படும் மின்வெட்டால் பள்ளி மாணவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும வேதனையான விஷயம்.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்