32°C
விளம்பரம்
Advertisement

சென்னை ஐசிஎப்பில் தயாரான முதல் சோலார் ரயில் சேவையில் டெல்லியில் தொடங்கியது!~

admin சேலம் Published: July 15, 2017 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




அதிக பண செலவு, காற்று மாசுபடுதல் ஆகியவற்றை குறைக்கவும், டீசல் மற்றும் மின்சார பயன்பாட்டை பெருமளவில் குறைக்கும் வகையிலும் சோலார் ரயில் பெட்டிகள் கொண்ட சோலார் ரயிலை இந்திய ரயில்வே துறை அறிமுகப்படுத்தியுள்ளது. டெல்லி ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு சோலார் ரயிலை அறிமுகம் செய்து வைத்தார்.

அப்போது பேசிய அவர், இந்திய ரயில்வேயில் விரைவில் அதிகளவில் சோலார் ரயில்கள் அறிமுகப்படுத்தப் படும் என்று கூறினார். சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் தூய்மையான எரிபொருட்களைப் பயன்படுத்துவதை ரயில்வே உறுதிப்படுத்தி இருப்பதாக கூறிய அவர், மாற்று எரிசக்தியை அதிகளவில் பயன்படுத்த ரயில்வே துறை முயற்சி மேற்கொண்டு வருவதாக தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “”ரயில்களை சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் உருவாக்கும் திட்டத்துக்கு இதுவொரு தொடக்கப்புள்ளி. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்த முயற்சித்து வருகிறோம். பயோ- டாய்லெட்டுகள், தண்ணீர் மறுசுழற்சி, கழிவுகளை சுத்திகரிப்பது உள்ளிட்ட செயல்பாடுகளையும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வகையில் மாற்றிக் கொண்டிருக்கிறோம். இந்த உள்ளூர் ரயிலின் பயணப் பாதை விரைவில் முடிவு செய்யப்படும். புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள சூரிய மின்சக்தி ரயில் சுமார் 21,000 லிட்டர்கள் டீசலை மிச்சப்படுத்தும். இதனால் ஒவ்வொரு வருடமும் ரூ.12 லட்சம் மிச்சமாகும்” என்றார்

முதன்முறையாக டெல்லியின் சராய் ரோஹில்லா மற்றும் ஹரியானாவில் பருக் நகருக்கு இடையே இந்த சோலார் ரயில் இயக்கப்படும். இதில், 54 லட்ச ரூபாய் செலவில், 6 ரயில் பெட்டிகளின் மேற்கூரைகளில் சோலார் பேனல்கள் பொருத்தப்பட்டு உள்ளன. சூரிய ஒளி இல்லாதபோது, ரயிலை இயக்க பேட்டரி அமைப்பும் பொருத்தப்பட்டுள்ள இந்த சோலார் ரயில் பெட்டிகள் சென்னையில் உள்ள ஐ.சி.எப். தொழிற்சாலையில் வடிவமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்