கைதிகள் இல்லை; அதனால் ஜெயில்களை வாடகை விடுகிறது நெதர்லாந்து!

கைதிகள் இல்லை; அதனால் ஜெயில்களை வாடகை விடுகிறது நெதர்லாந்து!

ஐரோப்பிய நாடான நெதர்லாந்துக்கு ஹாலந்து ஏன்று இன்னொரு பெயர் இருப்பது உங்களுக்குத்தெரிந்திருக்கும். அந்நாட்டிற்கு இன்னொரு பெயரும் உண்டு. அது சைக்கிள் தேசம். உண்மையில் இது பெயர் அல்ல ,பாராட்டு ! ஆம், நெதர்லாந்து உலகிலேயே சைக்கிளோட்டிகளுக்கு நட்பான தேசமாக குறிப்பிடப்படுகிறது. சைக்கிள் பயன்பாட்டில் மட்டும் அல்ல சைக்கிள் பயன்பாட்டை ஊக்குவிப்பதிலும் நெதர்லாந்து முன்னோடி தேசமாக கருதப்படுகிறது. நெதர்லாந்து நாட்டின் சைக்கிள் பயன்பாடு தொடர்பான புள்ளிவிரங்களும் தகவல்களும் உங்களை வியக்க வைக்கும். பொறாமைப்பட வைக்கும். அப்பேர் பட்ட நெதர்லாந்தில் கைதிகளின் மிகவும் குறைவாக இருப்பதால் ஜெயில்களை பிற நாடுகளுக்கு வாடகைக்கு விடப்பட்டுள்ளதாக ஓர் செய்தி வெளியாகி சகலரையும் புருவத்தை உயர்த்த வைத்துள்ளது.

நெதர்லாந்தில் எக்கச்சக்கமான ஜெயில்கள் கட்டப்பட்டு, அதில் கைதிகள் அடைக்கப்பட்டு வந்தனர். தற்போது குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து விட்டது. இதனால் நெதர்லாந்தில் உள்ள ஜெயில்களில் கைதிகள் இல்லை. இதனால் ஜெயில் வளாகத்தை வேறு பயன்பாட்டிற்கு அந்நாட்டு அரசு பயன்படுத்தி வருகிறது.

அங்கு இயங்கி வந்த பெண்கள் ஜெயில் தற்போது உணவு விடுதியாக மாற்றப்பட்டு விட்டது. அதோடு மட்டுமின்றி, ஜெயில்கள் கட்டடங்கள் அரசு முற்றும் தனியார் பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது. நெதர்லாந்தில் உள்ள பிரேடா ஜெயிலில் தற்போது 90 அரசு மற்றும் தனியார் நிறுவன அலுவலகங்கள் செயல்பட்டு வருகன்றன.

அதிலும் 2014-ம் ஆண்டு குற்றங்கள் பெருமளவு குறைக்கப்பட்டு குற்றவாளிகள் இல்லாத காரணத்தால் 27 ஜெயில்கள் மூடப்பட்டுள்ளன. அவற்றில் 6 சிறைச்சாலைகள் 17 கோடி ரூபாய்க்கு விற்கப்பட்டுள்ளன. அத்துடன் ஒரு சிறைச்சாலை நார்வே கைதிகளை அடைப்பதற்காக வாடகைக்கு விடப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Posts