ஜெயலலிதா இன்னிக்குக் கூட டிஸ்சார்ஜ் ஆகலாம்! – அப்போலோ ரெட்டி

ஜெயலலிதா இன்னிக்குக் கூட டிஸ்சார்ஜ் ஆகலாம்! – அப்போலோ ரெட்டி

தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா உடல்நல குறைவு காரணமாக கடந்த செப்டம்பர் 22-ந் தேதி முதல்  சென்னை ஆயிரம் விளக்கு அப்போலோ  ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். தொடர் சிகிச்சையில் உள்ள அவருக்கு அப்பல்லோ ஆஸ்பத்திரி டாக்டர் குழுவும், லண்டன் மற்றும் சிங்கப்பூரை சேர்ந்த டாக்டர் குழுவினரும் சிகிச்சை அளித்து வருகின்றனர். சிறப்பான சிகிச்சை காரணமாக முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருகிறதாம்.

jaya nov 18

இதனிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார் என அப்போலோ மருத்துவமனை தலைவர் பிரதாப் சி ரெட்டி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் கூறும்போது, “தமிழக முதல்வர் ஜெயலலிதா நோய் தொற்றிலிருந்து முழுமையாக மீண்டு விட்டார். அவருடைய உடல்நிலையை மேலும் தேற்ற சில சிகிச்சைகள் தற்போது அளிக்கப்பட்டு வருகிறது. அவரது மனநிலை செயல்பாடுகள் தற்போது நன்றாக இருக்கிறது. அவர் செயற்கை சுவாசம் இன்றி இயற்கையாக சுவாசிக்கிறார். தொற்று மீண்டும் ஏற்படாமல் தடுக்கவே அவசரசிகிச்சை பிரிவில் முதல்வர் உள்ளார். முதல்-அமைச்சர் ஜெயலலிதா விரும்பும்போது வீட்டிற்கு செல்லலாம், மருத்துவக் குழு ஒன்று முதல்வரை தீவிரமாக கண்காணித்து வருகிறது” என்றார்.

Related Posts