தலைமை பொறுப்புகளில் பெண்கள்- இந்தியாவில் கணிசமாக உயர்வு!
இந்தியாவில் பெண்களை உயர் பதவிகளில் பார்ப்பது கடினம். ஆனால், தற்போது பல நிறுவனங்கள் பெண்களை உயர் அதிகாரிகளாக நியமித்து வருகின்றன. இது அந்த நிறுவனங்கள் சிறந்த வளர்ச்சியை எட்ட உதவுகின்றன. எனவே அத்தகைய பொறுப்புகளை வகிக்கும் அளவுக்கு திறமை கொண்ட பெண்களுக்கான தேவை ஒவ்வொரு ஆண்டும் 10 சதவீதம் வளர்ச்சி அடைந்து வருகிறது என்று சில ஆய்வு நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது. ஆனாலும் ஐடி, சில்லரை வர்த்தகம், விருந்தோம்பல், ஊடகம், பொழுதுபோக்கு, போக்குவரத்து மற்றும் சுற்றுலா, வங்கி உள்ளிட்ட துறைகளில் பெண் அதிகாரிகளுக்கான தேவை அதிகரித்துள்ளது என்றும வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

என்றாலும் அண்மைகாலமாக் இந்திய நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குனர் பதவிகளில் பெண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்றும் இந்தியாவில் உள்ள நிறுவனங்களில் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை 2009–ஆம் ஆண்டில் 11 சதவீதமாக இருந்தது. இது தற்போது 21 சதவீதமாக உயர்ந்துள்ளது எனவும் தெரிய வருகிறது
தற்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட 215 நிறுவனங்களில், 45 நிறுவனங்களில் பெண்கள் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றனர்.குறிப்பாக வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவனங்களில் பெண்கள் ஆதிக்கம் அதிகமாக உள்ளது. இத்துறையில் 52 தலைமைச் செயல் அதிகாரிகளில் 15 பேர் பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சமூக, கலாச்சார மற்றும் கல்வித் துறையில் ஏற்பட்டு வரும் மாற்றங்களே இதற்கு காரணமாகும்.இந்நிலையில் உலகில் 38 சத விகிதம் நிறுவனங்களில் உயர் பதவியில் பெண் களே இல்லை. அந்நிறு வனங்களில் பெண்கள் வேலை செய்தாலும் தலைமைப் பொறுப்பில் அவர்களுக்கு இடமில்லை.ஆசிய நாடுகளில் அதிகமாக தாய்லாந்து, சிங்கப்பூர், ஹாங்காங் மற்றும் சீனாவில் உள்ள கார்ப்பரேட் நிறுவனங் களில் 30 முதல் 45 சத விகிதம் வரை பெண்கள் உயர் பதவி வகிக்கின்றனர் என்பதும் குரிப்பிடத்தக்கது.


