தமிழ் குரல் / AI Voice
நாமக்கல் கூலிப்பட்டி முருகன் கோயில் குருக்களின் மூன்றாவது மகளான ஜெயந்தி பொருளாதாரத்தில் எம்.ஏ.பட்டம் பெற்றவர். மாற்றுச்சமூகத்தை சேர்ந்த வாசுதேவன் என்பவரை காதல் மணம் புரிந்த பின்னர் குடும்பத்தாரால் தனிமைப்படுத்தப்பட்டதால் பிழைப்புக்காக ஆண்கள் பணி செய்ய பயப்படும் மின்சார சுடுகாட்டில் 2800 உடல்களை தகனம் செய்து தற்போதும் மின் மயானத்தை அழகுற பராமரித்து வரும், எம்.ஏ., பொருளாதாரம் படித்த, பிராமண பெண் ஜெயந்திக்கு, தமிழக அரசின், ‘கல்பனா சாவ்லா’ விருது வழங்கப்பட்டது.

தமிழகத்தில் வருடந்தோறும் , சுதந்திர தின விழாவில், துணிவு மற்றும் சாகச செயலுக்கான ‘கல்பனா சாவ்லா விருது’ வீர தீர செயல் புரியும் பெண்ணுக்கு, முதல்வர் கையால் வழங்கப்படுகிறது. காசோலைநேற்று நடந்த சுதந்திர தின விழாவில் கல்பனா சாவ்லா விருதை நாமக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த ஜெயந்திக்கு முதல்வர் ஜெயலலிதா வழங்கி கவுரவித்தார். அவருக்கு, ஐந்து லட்சம் ரூபாய்க்கான காசோலை தங்க முலாம் பூசப்பட்ட பதக்கம் மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.
விருது பெற்ற ஜெயந்தியிடம் பேசிய போது, “நாங்கள் கலப்புத் கலப்பு திருமணம். அதனால் என் வீட்டில் என்னை புறக்கணித்து விட்டார்கள் .நான் பிராமண வகுப்பைச் சேர்ந்தவள். என் கணவர் வாசுதேவன் டிராவல்ஸ் வைத்துள்ளார்.எங்களுக்கு நந்தகுமார், நவீன்குமார் என, இரண்டு மகன்கள் உள்ளனர். நான் எம்.ஏ., பொருளாதாரம் படித்துள்ளேன்.
இதுக்கிடையிலே என் தந்தை பட்டு குருக்கள் இறந்தபோது அவரது இறுதிச் சடங்கு செய்ய உறவினர்கள் வராமல் சிரமப்பட்டேன். மேலும் குடும்ப சூழலால் வேலை தேடியபோது, நாமக்கல் நகராட்சி, சேந்தமங்கலத்தில் உள்ள மின் மயானத்தில், பூங்காவை பராமரிக்கும் வேலை கிடைத்தது.அந்த மின் மயானத்தை, ‘யுனைடெட் வெல்பர் டிரஸ்ட்’ என்ற தொண்டு நிறுவனம், பராமரித்து வருகிறது. அதில் சேர்ந்து, மின் மயான பூங்காவை பராமரிக்கத் துவங்கினேன். மயானத்தில் உடலை எரிக்கும் ஊழியர்கள் அப்பணியை சுத்தமாகச் செய்யாததால் நானே அந்தப் பணியைச் செய்கிறேன் என கேட்டேன்; தொண்டு நிறுவனத்தினர் தயங்கினர். என் வற்புறுத்தலால் அப்பணியை ஒப்படைத்தனர். முதலில் ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் வேலை செய்யுங்கள். அதன் பின்பு பணி நிரந்தரம் செய்வதை பற்றி பார்க்கலாம் என்றனர். முதல் ஒரு மாதம் சம்பளம் இல்லாமல் ஆர்வத்துடன் வேலை பார்த்ததால் அந்த நிறுவனம் என்னை உடனடியாக பணி நிரந்தரம் செய்தனர்.
இந்த ஜாப்பில் சேர்ந்த என் குடும்பத்திலும், உறவினர்கள் மத்தியிலும், கடும் எதிர்ப்பு கிளம்பியது. அதை கண்டு கொள்ளாமல் துணிச்சலுடன் மேற்கொண்டேன். மின் மயானத்தை துாய்மையாக பராமரிக்கத் துவங்கினேன்; பொதுமக்கள் ஆதரவு தந்தனர். தற்போது மின் மயானத்தின் மேலாளராக உள்ளேன். எனக்கு உதவியாக மலர் என்ற பெண் பணிபுரிந்து வருகிறார்.
கடந்த, 2013ல் இப்பணியில் சேர்ந்த நான் இதுவரை, 2,500க்கும் மேற்பட்டோரின் உடல்களுக்கு, இறுதிச் சடங்குகளை செய்துள்ளேன். இறந்தோர் தெய்வத்திற்கு சமம். தெய்வத்திற்கு பணிவிடை செய்வதாக நினைத்து, இப்பணியை செய்து வருகிறேன். என் பணியை பாராட்டி, கல்பனா சாவ்லா விருதை, முதல்வர் வழங்கியிருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை தந்துள்ளது. மேலும் சிறப்பாக பணி புரிய இவ்விருது உதவும்.முதல்வர் என்னிடம் பேசும்போது, ‘நீங்கள் பிராமணப் பெண்ணா?’ எனக் கேட்டார்; ‘ஆமாம்’ என்றேன். உடனே முதல்வர், ‘இவ்விருதை உங்களுக்கு வழங்குவதில் பெருமிதம்அடைகிறேன்’ என்றார். முதல்வருடன் பேசியது மகிழ்ச்சியாக உள்ளது” என்று ஜெயந்தி கூறினார்.
