உலகின் டாப் விஞ்ஞானிகளை ஐ. க்யூவில் மிஞ்சிய இந்திய சிறுவன்!

உலகின் டாப் விஞ்ஞானிகளை  ஐ. க்யூவில் மிஞ்சிய இந்திய சிறுவன்!

‘ஐக்யூ…இதை அறிவுத் திறன் அல்லது நுண்ணறிவு என்று சொல்லலாம். அதாவது தன்னைச் சுற்றி உள்ள விஷயங்களை எவ்வளவு அறிவுக்கூர்மையுடன் எதிர்கொள்கிறார் என்பதே இது. ஒரு வரின் ஐக்யூ லெவலை அவரின் உடல் ரீதியான வயதையும் மூளை ரீதியான வயதையும் விகிதம் போட்டு தெரிந்து கொள்ளலாம்….

i q aug 11

iq (intelligence quotient) = (Mental Age / Chronological Age) x 100.

மூளை ரீதியான வயது X 100
உடல் ரீதியான வயது

குழந்தைக்கு மூளை ரீதியான வயது 9 என்று வைத்துக் கொள்ளுங்கள். அதன் உடல் ரீதியான வயது பத்து எனும் போது, அதை நூறால் பெருக்கினால் 90 வருகிறது. (9/10X100=90)

குழந்தையின் ஐக்யூ லெவல் 90. இது சராசரியான ஐக்யூ. 90லிருந்து 100 வரை ஓகே.

இண்டெலெக்சுவல் அல்லது அபார அறிவுத் திறன் கொண்டவர்களின் ஐக்யூ 125க்கும் மேலாக இருக்கும். 200 கூட மிகச் சிலருக்கு இருக்கும். ஆனால் இதற்கு எதிர் மறையாக சிலருக்கு ஐக்யூ லெவல் 60, 50, 30, என கம்மியாக இருக்கும். ‘தெய்வத் திருமகள்’ படத்தில் விக்ரமின் ஐக்யூ லெவல் மாதிரி.

இந்நிலையில் லண்டனில் வசித்து வரும் இந்திய வமசாவளி துருவ் தலாடி எனும் 10 வயது சிறுவன் மென்சாவின் அறிவுத்திறன் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களை பெற்று சாதனை படைத்துள்ளான்.2016 ஜூலையில் நடைபெற்ற மென்சாவின் கேட்டில் (Cattell III B Paper) தேர்வில் 162 மதிப்பெண்கள் பெற்று சாதனை படைத்துள்ளான்.

ஐன்ஸ்டீன் மற்றும் ஸ்டீபன் ஹாக்கிங் ஆகியோர் பெற்ற 160 மதிப்பெண்களை விட இந்திய சிறுவன் அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளான். இதன்மூலம் பார்க்கிங்சைட் பகுதியில் உள்ள புல்வுட் பிரைமரி பள்ளியில் படித்து வரும் துருவ், உலகின் அதிக அறிவுத்திறன் வாய்ந்தோர் குழுவில் இணைந்துள்ளார். “அறிவுத்திறன் தேர்வானது கடினமாக இல்லாவிட்டாலும், தேர்வுக்கு ஒதுக்கப்பட்ட குறைந்தபட்ச நேரமே தேர்வை கடினமானதாக மாற்றியது” என துருவ் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

அது சரி ஐ க்யூ லெவல் அதிகமாக என்ன செய்ய வேண்டும்?

குழந்தைகளின் முதல் ஐந்து வயது வரை சத்தான உணவைக் கொடுப்பது ரொம்பவே முக்கியம்.

பாடப் புத்தகங்களை தவிர, நிறைய விஷயங்களை அவர்கள் கற்றுக்கொள்ள ஊக்கப்படுத்த வேண்டும். பாட்டு கேட்க, இயற்கையை ரசிக்க, அவங்களுக்குத் தெரியாத விஷயங்களை கேள்வி கேட்டு தெரிந்து கொள்ள உற்சாகப்படுத்த வேண்டும்.

முக்கியமா நாம் பொறுமையாக அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டும். நமக்கே தெரியாத விஷயமாக இருந்தாலும்கூட அதை நாம் முதலில் தெரிந்துகொண்டு பிறகு கு ழந்தைக்குத் தெரியப்படுத்தலாம். ‘அதிகப் பிரசங்கி, ஓவர் ஸ்மார்ட்’ என்று நீங்களே உங்க குழந்தையை முத்திரை குத்திவிடாதீர்கள்.

சிலர் குழந்தைகளுடைய அறிவாற்றலை நார்மல் விஷயமாக எடுத்துக்கொள்ளாமல் ரொம்வும் கொம்பு சீவி விடுவார்கள்.

அது, குழந்தைகளுக்கு தேவையில்லாத சுப்பிரீயாரி ட்டி எண்ணத்தைக் கொடுத்துவிடும். ‘‘எங்க விஷால் மாதிரி வரவே வராது… இந்த சின்ன வயசிலே எப்படி பேசறான் பாரு’’ என்று வருவோர் போவோர்களிடம் அவனைப் பற்றியே காதில் ரத்தம் வரும் அளவுக்கு அறுத்துத் தள்ளுவார்கள்.

இப்படி இரண்டும் இல்லாமல் மிதமாக குழந்தைகளை அரவணைத்துப் போக வேண்டும். அதற்கு நாம்தான் முதலில் பக்குவப்பட வேண்டும். குழந்தைங்க ஷார்பாக புத் திசாலித்தனமாக இருந்தார்கள் என்றால் அதற்கேற்ற மாதிரி அவர்களை நாம் ட்யூன் பண்ணனும். அவங்களோட விருப்பத்துக்கும் ஈடுபாட்டுக்கும் ஏற்ற மாதிரி பயிற்சி தரவேண்டும்.

உதாரணமாக ஐக்யூ லெவல் 125 இருக்கும் குழந்தைகள் படிப்பில் நன்றாக வருவார்கள். ஐ.ஏ.எஸ். படிக்க வைக்கலாம்.

110 இருந்தால் டாக்டருக்குப் படிக்க வைக்கலாம்.

100 அல்லது 90 இருந்தா பேஸிக்காக ஒரு டிகிரி அல்லது ஏதாவது புரொபஷனல் லெவல் படிப்பை படிக்க வைக்கலாம்.

80க்கு கீழே இருந்தால் அவர்களை கட்டாயப்படுத்தி படி படி என்று சொன்னாலும் அவர்களால் முடியாது. அதனால் பிழைப்புக்கான எதாவது ஒரு தொழிலைக் கற்றுக் கொடுக்கலாம்.

ஐக்யூவெல்லாம் தெரியாத அந்தக் காலத்திலேயே குழந்தைகளை மூன்று வகையாகப் பிரிப்பார்கள். கற்பூரம், கரித்துண்டு, வாழை மட்டை. முதல் வகை ஐக்யூ அதிகம் இரு ப்பவர்கள். இரண்டாமவர் மத்திய ரகம். மூன்றாம் ரகம் குறைந்த ஐக்யூ உடையவர்கள்.

இதில் நம் குழந்தை எந்த ரகம் என்று பார்த்து அதை ஏற்றுக் கொண்டு அதற்குப் பொருத்தமான கல்வி முறையைத் தந்தாலே அவன் பிற்காலத்தில் நன்றாக உருவாவான்!’’