வள்ளுவர் சிலைக்காக உணர்ச்சிவசபடாத தமிழர்களுக்கு நன்றி – தருண் விஜய்

வள்ளுவர் சிலைக்காக  உணர்ச்சிவசபடாத தமிழர்களுக்கு நன்றி – தருண் விஜய்

உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் கங்கை நதிக்கரையில் 12 அடி உயர திருவள்ளுவர் சிலை அமைக்க, பாஜக எம்பி தருண் விஜய் ஏற்பாடு செய்தார். ஹரித்வாரில் பல இடங்களில் சிலையை முயன்ற போதும் எதிர்ப்பு காரணமாக டாம்கோட் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக வளாகத்தில் தற்காலிகமாக சிலை திறக்கப்பட்டது. ஆனால், அதன் பிறகு கருப்பு நிற பிளாஸ்டிக் பையில் சுற்றப்பட்டும், ஹரித்வாரில் உள்ள பூங்கா ஒன்றில் வைக்கப்பட்டது.

 val jy 20

இதற்கு நாடு முழுவதும் உள்ள தலைவர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் உள்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், உத்தரகாண்ட் மாநிலம் ஹரித்வாரில் திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது என பாஜக எம்பி தருண் விஜய் தகவல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், திருவள்ளுவர் சிலை மீண்டும் நிறுவப்பட்டது என்றும், மலர் மாலை அணிவிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும் இதுதொடர்பாக, அவர் வெளியிட்ட அறிக்கையில், “திருவள்ளுவர் சிலையை அகற்றியது தொடர்பாக, நான் அனுப்பிய கடிதத்தை முதல்வர் ஹரீஷ் ராவத்திடம் கொண்டு சேர்த்த ஆளுநர் கே.கே.பாலுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த விவகாரத்தைப் பயன்படுத்தி மேலும் சர்ச்சையை உருவாக்காமல், அதே நேரத்தில் நிலைமையின் தீவிரத்தை உணரும் வகையில் உத்தரகண்ட் அரசுக்கு அழுத்தம் கொடுத்த ஊடகங்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், திருவள்ளுவர் சிலை அகற்றப்பட்டவுடன் உணர்ச்சிவசப்படாமல் ஜனநாயகப்பூர்வமான முறையில் தங்களது உணர்வுகளைப் பதிவு செய்த அனைத்து தமிழ் மக்களையும் பாராட்டுகிறேன்.

திருவள்ளுவர் சிலையை மீண்டும் நிறுவும் விழாவில் கலந்து கொள்ளுமாறு, அந்தச் சிலை அகற்றப்பட்டதற்காக கவலை தெரிவித்த அனைத்து தமிழத் தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்க வேண்டும் என முதல்வரிடம் கேட்டுக் கொள்கிறேன். வள்ளுவரின் சிலை மீண்டும் நிறுவப்படுவதால் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு இல்லமும் அவரது சக்தியை அறியும் என்று அந்த அறிக்கையில் தருண் விஜய் தெரிவித்திருந்தார்

Related Posts