எரிபொருளை சேமிக்க அலுவலகத்துக்கு நடந்தே செல்லும் பொதுத் துறை நிறுவன தலைவர்கள்!

எரிபொருளை சேமிக்க அலுவலகத்துக்கு நடந்தே செல்லும் பொதுத் துறை நிறுவன தலைவர்கள்!

கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக எரிபொருளை சேமிக்கும் வகையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் தலைவர் ஆர்.எஸ்.புட்டோலா ஒரு வாரத்தில் 15 கிலோ மீட்டர் நடந்து அலுவலகத்துக்கு செல்கிறார். ஓ.என்.ஜி.சி. தலைவர் சுதிர் வாசுதேவா வாரம் ஒரு முறை மெட்ரோ ரயிலில் பயணம் செய்கிறார். கெயில் நிறுவனத்தின் தலைவர் பீ.சி.திரிபாதி தன் வீட்டிலிருந்து அலுவலகத்திற்கு நடந்து சென்று வருகிறார்.மேலும் பெட்ரோலிய அமைச்சகத்தின் இரண்டு இணை செயலாளர்கள் 8 கிலோ மீட்டர் தூரம் சைக்கிளில் அலுவலகம் செல்கின்றனர்.
21 - vanikam ceo walk
இந்தியா தனது கச்சா எண்ணெய் தேவைப்பாட்டில் 80 சதவீதத்தை இறக்குமதி செய்து வருகிறது. வாகன எண்ணிக்கை அதிகரித்து வருவதால் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருள் தேவை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. சென்ற நிதி ஆண்டில் மட்டும் கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக 14,500 கோடி டாலர் செலவினம் ஏற்பட்டுள்ளது. நடப்பு கணக்கு பற்றாக்குறை மிகவும் உயர்ந்துள்ளதற்கு இது முக்கிய காரணமாகும். எனவே, கச்சா எண்ணெய் இறக்குமதியை கட்டுப்படுத்தி 2,000 கோடி டாலரை சேமிக்கும் வகையில் ஏழு அம்ச திட்டம் ஒன்றை பெட்ரோலிய துறை மந்திரி வீரப்ப மொய்லி அண்மையில் அறிவித்தார்.

இதன் ஓர் அங்கமாக பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகள் மற்றும் எண்ணெய் நிறுவன தலைவர்கள் ஒவ்வொரு புதன்கிழமையும் கார்களில் பயணம் செய்வதற்கு பதிலாக பஸ், ரெயில் போன்று பொது வாகனங்களை பயன்படுத்த வேண்டும் என வீரப்ப மொய்லி கடந்த மாதம் அறிவித்தார். இதற்கு முன்னோடியாக அவரே இம்மாதம் 9–ந் தேதி (புதன்கிழமை) மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். இதற்கு அடுத்த புதன்கிழமை (16–ந் தேதி) விடுமுறையாக இருந்தது. வீரப்ப மொய்லியை தொடர்ந்து ஓ.என்.ஜி.சி. தலைவர் வாசுதேவா அலுவலகங்களுக்கு தொடர்ந்து மெட்ரோ ரயிலில் சென்று வருகிறார்.

எரிபொருளை சேமிக்கும் முயற்சிக்கு அமோக ஆதரவு கிடைக்க தொடங்கியுள்ளது என வீரப்ப மொய்லி தெரிவித்தார். இந்த சிக்கன நடவடிக்கையால் இம்மாதம் 9–ந் தேதி மட்டும் ரூ.2 கோடி மதிப்பிலான எரிபொருள் மிச்சப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழிமுறையை கடைபிடிக்கும்படி பிற அமைச்சர்களுக்கும், அதிகாரிகளுக்கும் வீரப்ப மொய்லி ஏற்கனவே கோரிக்கை விடுத்துள்ளார்.