மூடிப் போட்டாங்கய்யா.. 500 டாஸ்மாக் கடையை மூடிட்டாங்க!

மூடிப் போட்டாங்கய்யா.. 500 டாஸ்மாக் கடையை மூடிட்டாங்க!

தமிழக முதல்வர் ஜெயலலிதா, தேர்தலின்போது வெளியிட்ட தேர்தல் அறிக்கையில் தமிழகத் தில் மதுவிலக்கு படிப்படியாக அமல்படுத்தப்படும் என்று அறிவித்திருந்தார். அதனைத் தொடர்ந்து முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கோப்பில் கையெழுத்திட்டார்.

tasmac 19இந்நிலையில் தமிழகம் முழுவதும் 500 கடைகளை மூடுவதற் கான உத்தரவை டாஸ்மாக் மேலாண் இயக்குநர் ஆர்.கிர்லோஷ்குமார் நேற்று பிறப்பித்துள்ளார்.

அந்த உத்தரவில் , “அரசு உத்தரவின்படி, மாவட்ட ஆட்சியர்கள், டாஸ்மாக் முதுநிலை மண்டல மேலாளர்கள் ஆகியோர் பரிந்துரைகளின் அடிப்படையில் ஜூன் 19-ம் தேதியிலிருந்து 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படுகிறது.

சென்னை மண்டலத்தில் அதன்படி சென்னை மண்டலத்தில் 58 கடைகள், கோவை மண்டலத்தில் 60 கடைகள், மதுரை மண்டலத்தில் 201 கடைகள், திருச்சி மண்டலத்தில் 133 கடைகள், சேலம் மண்டலத்தில் 48 கடைகள் என மொத்தம் 500 கடைகள் மூடப்படுகிறது. அதில் உள்ள இருப்பு மதுக்கள் மீண்டும் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படும். இந்த கடைகள் மூடப்படுவதை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உறுதி செய்ய வேண்டும். மூடப்படும் கடைகளில் பணியாற்றும் பணியாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும். இதற்கான உத்தரவு தனியாக வெளியிடப்படும்.” என்று உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

மண்டல வாரியாக மூடப்படும் கடைகளின் எண்ணிக்கை….

சென்னை மண்டலம்

சென்னை வடக்கு 2

மத்திய சென்னை 3

தென் சென்னை 2

காஞ்சிபுரம் வடக்கு 13

காஞ்சிபுரம் தெற்கு 3

திருவள்ளூர் கிழக்கு 16

திருவள்ளூர் மேற்கு 19

மொத்தம் 58

கோவை மண்டலம்

கோவை வடக்கு 1

கோவை-தெற்கு 4

திருப்பூர் 8

ஈரோடு 16

நீலகிரி 31

மொத்தம் 60

மதுரை மண்டலம்

மதுரை தெற்கு 21

மதுரை வடக்கு 16

திண்டுக்கல் 10

ராமநாதபுரம் 36

விருதுநகர் 27

சிவகங்கை 43

நெல்லை 9

தூத்துக்குடி 30

கன்னியாகுமரி 6

தேனி 3

மொத்தம் 201

திருச்சி மண்டலம்

திருச்சி 14

நாகப்பட்டினம் 16

தஞ்சாவூர் 16

புதுக்கோட்டை 14

கடலூர் 15

கரூர் 14

திருவாரூர் 8

விழுப்புரம் 29

பெரம்பலூர் 7

மொத்தம் 133

சேலம் மண்டலம்

தருமபுரி 1

கிருஷ்ணகிரி 6

நாமக்கல் 11

வேலூர் 8

திருவண்ணாமலை 18

அரக்கோணம் 4

மொத்தம் 48

Related Posts