3டி படங்களை கண்ணாடி இல்லாமல் பார்க்கலாமாக்கும்!
கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுகளுக்கு முன்பு வந்த இந்தியாவின் முதல் 3-டி படமான மை டியர் குட்டிச் சாத்தான் மக்களை பெரிதும் கவர்ந்தது அதன் தயாரிப்பாளர் அப்பச்சன் அந்த படத்தின் அபரிமிதமான் லாபத்தை வைத்து சென்னையில் கிஷகிந்தா என்ற் தீம்பார்க்கே கட்டினார். அதற்கு பிறகும அவ்வப்போது 3டி படங்கள் வரத்தான் செய்தது,ஆனால் அவையெல்லாம் வெற்றி பெறவே இல்லை. இந்நிலையில் சமீபகாலமாக ஹாலிவுட்டில் பெரும்பாலான படங்கள் அனைத்தும் 3டி பார்மெட்டிலும் வர ஆரம்பித்தது. அப்படி வந்தவைகளில் டின் டின் உள்ளிட்ட சில அனிமேஷன் படங்கள், அவதார் உள்ளிட்ட சில கமர்ஷியல் படங்கள் பெரிய ஹிட் ஆனது.
இது போன்ற முப்பரிமாணத்துடன் கூடிய ‘3டி’ படங்கள் சிறப்பு ஒலி, ஒளி அமைப்புகளுடன்தான் தயாரிக்கப்பட்டு திரைக்கு வருகின்றன. இப்படத்தை சிறப்பு கண்ணாடி அணிந்து மட்டுமே பார்க்க முடியும். வெறுங்கண்ணால் பார்த்தால் அதற்குரிய ஸ்பெஷல் எபெக்ட் கிடைக்காது.

இந்நிலையில் தற்போது, இதையெல்லாம் மிஞ்சும் வகையில் மிக பிரமாண்டமான சினிமா படம் லேட்டஸ்ட் எபெக்டில் தயாரிக்கப்பட்டுள்ளது. இதை சிறப்பு கண்ணாடி அணியாமல் சாதாரணமாக வெறுங்கண்ணால் பார்த்து ரசிக்க முடியும். கடந்த வாரம் புசான் சர்வதேச திரைப்பட விழா நிகழ்ச்சியில் சினிமா தொடர் சி.ஜே. சிஜிவி உருவாக்கப்பட்ட 30 நிமிடம் ஓடக்கூடிய ஸ்க்ரீன் எக்ஸ் படம் வெளியிட்டுள்ளனர்.
இந்த சினிமாவை 270 டிகிரி கோணத்தில் பார்க்கலாம். ‘ஸ்கிரீன் எக்ஸ்’ தொழில்நுட்பத்தில் இந்த சினிமா படம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஒரே காட்சியை ஒரே நேரத்தில் 3 காமிராக்களில் பலவித கோணங்களில் படம் பிடித்து அதை ஒருங்கிணைத்துள்ளனர்.
சிறப்பு அம்சங்களுடன் கூடிய இந்த சினிமா படத்தை தென்கொரிய டைரக்டர் கிம்ஜிவூன் உருவாக்கியுள்ளார். இதற்கு ‘தி எக்ஸ்’ என பெயரிடப்பட்டுள்ளது. இது 30 நிமிடங்கள் ஓடக்கூடிய உளவாளி, ‘திரில்லர்’ கதை அம்சத்துடன் கூடிய படமாகும். கடந்த வாரம் தென்கொரியாவின் புசானில் நடந்த சர்வதேச படவிழாவில் ‘பிரீமியர் ஷோ’ ஆக இப்படம் திரையிட்டு காட்டப்பட்டது.
http://www.youtube.com/watch?v=ktDzAKdE18I
இந்த மாத இறுதியில் தென் கொரியாவில் உள்ள 31 சினிமா தியேட்டர்களில் இந்த படம் திரையிடப்பட உள்ளது. அதற்காக கூடுதல் திரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இச்சினிமா படம் உருவாக்கியது குறித்து டைரக்டர் கிம் ஜி வூன் கூறும் போது, ‘இந்த புதிய தொழில்நுட்பம் சினிமாவுக்கு மிகப்பெரிய பிரமாண்டத்தை கொடுத்துள்ளது’ என்று கூறியுள்ளார்.
New ‘Screen X’ technology offers 3D effect without special glasses
**************************************************************
A new format that gives movie-goers a panoramic 270 degree view will be rolled out by South Korea’s biggest cinema chain this month, using the walls of theatres as additional screens.


