கோ 2 – கரண்ட் பாலிடிக்ஸை கலந்துக் கட்டி அடிச்சிருக்காங்க!

கோ 2 –  கரண்ட் பாலிடிக்ஸை கலந்துக் கட்டி அடிச்சிருக்காங்க!

விழாவொன்றிற்கு வரும் முதல்வர் பிரகாஷ் ராஜை பாபிசிம்ஹா, அதிரடியாக கடத்தி சிறைப்படுத்துகிறார். உடனே முதல்வரை மீட்பதற்காக உள்துறை அமைச்சரால் சிறப்பு போலீஸ் படை ஒன்றை உருவாக்கி. அதற்கு தலைமை தாங்கும் ஜான் விஜய், பாபி சிம்ஹாவுடன் பேச்சுவார்த்தை நடத்த வைக்கிறார்கள்.

ko 2 may 13

அப்போது பாபி சிம்ஹா தன்னுடைய ‘டிமான்ட்’களை போலீஸிடம் தெரிவிக்கிறார். மேலோட்டமாக கேட்டால் கொஞ்சம் சின்னப் பிள்ளைத்தனாக இருந்தாலும் அது மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது. அதிர்ச்சிக்குள்ளாக்கும் அளவுக்கு பாபி சிம்ஹா கேட்ட டிமாண்டுகள் என்ன? ஸ்டேட் சி, எம்-மை ஒரு சாதாரண குடிமகனால் எப்படி கடத்த முடிந்தது? ஏன் கடத்தப்பட்டார்? என்பதை சொல்லும் படம்தான் ‘கோ 2’.

சுமார் ரெண்டு ஆண்டுகளுக்கு முன்னால் தெலுங்கில் வெளிவந்த ‘பிரதிநிதி’ படத்தின் கதையைத் தழுவி உருவாக்கப் பட்டுள்ளது இந்த ‘கோ2’. அதேபோல், 1998ஆம் ஆண்டு சேரன் இயக்கத்தில் வெளிவந்த ‘தேசியகீதம்’ படத்தையும் கொஞ்சம் மிக்ஸ் பண்ணி தற்போதைய அரசியல் போக்கை சாடி இப்படத்தின் திரைக்கதையை அமைத்துள்ளார்கள்.

குறிப்பாக நாட்டில் நடக்கும் சின்ன சின்ன விஷயங்களுக்கும் பெரிய காரணம் இருக்கு என்பதை முதலமைச்சரிடம் விளக்கும் காட்சியில் கைத் தட்டல்களை அள்ளுகிறார். அதே சமயம் காத்ல், டூயட் எல்லாம் கொஞ்சம் கூட வரவில்லை என்பதை அவ்ரும் தெரிந்து கொள்ள வேண்டும். சி. எம் கேரக்டரில் வரும் பிரகாஷ்ராஜ் அவரே மொத்த படத்தையும் தாங்கி நிற்பார் என்று எதிர்ப்பார்த்தால், படம் முழுக்க ஒரு சேரில் உட்கார வைத்து டயலாக் கேட்க மற்றும் பேச மட்டும் வைத்துவிட்டார்கள். நிக்கி கல்ராணிக்கு நடிக்க சான்சே இல்லை.

ஒரு டி வி சேனல் ரிப்போர்டராக இருந்தபடி முதல்வரைக் கடத்த இவர்கள் போடும் பிளான் அதற்கு உதவி செய்யும் பாலசரவணன் என பல சின்னப் பிள்ளைத்தனங்கள். ஆனாலும் படம் நெடுகிலும் பல காட்சிகள், வசனங்களில் பிரபல கட்சிகள் செய்யும் கலாட்டாவை தோலுரித்து காட்டியுள்ளதுக்கு ஸ்பெஷல் சபாஷ். அதிலும் இளவரசு நம்மூர் அமைச்சரான ஓ பி எஸ்-ஐ அப்படியே நம் கண்முன் கொண்டு வருகிறார்.

மொத்தத்தில் படத்தின் முதல் பாதியில் வரும் பிளாஷ்பேக்,.லாஜிக் மீறல்கள்,போன்றவற்றை இன்னும் சீரியஸாக்கி திரைக்கதை ஆரம்பத்திலிருந்தே வேகமாக கொண்டு சென்றிருக்கலாம். ஆனாலும் கோ -வை யோசிக்காமல் கோ 2- வை ஒரு தடவை பார்க்கலாம்.