பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் வரிசையில் மு.க.ஸ்டாலின் – மதுரையில் ராகுல் பேச்சு

பெரியார், காமராஜர், எம்.ஜி.ஆர் போன்ற தலைவர்களின் வரிசையில் மு.க.ஸ்டாலின் – மதுரையில் ராகுல் பேச்சு

மதுரை பொதுக்கூட்டத்தில் ராகுல் காந்தி பேசிய போது, “மேடையில் இருக்கிற அனைத்து தலைவர்கள் மற்றும் வேட்பாளர்களுக்கு வணக்கம். மு.க.ஸ்டாலின் அவர்களோடு இணைந்து ஒரே மேடையில் உரையாற்றுவதிலே பெருமையடைகிறேன். நாங்கள் இருவரும் ஒரு சிந்தனையும் இணைந்து ஒரே நோக்கத்திற்காக செயல்படுகிறோம். மக்களுடன் ஒன்றாக கலந்துள்ள தலைவர்களும் உண்டு. மக்களை சந்திக்கும் தலைவர்களாக பெரியார், காமராஜ், எம்.ஜி.ஆர்., கருணாநிதி ஆகியோர் திகழ்ந்தனர். கருணாநிதி , ஸ்டாலினிடமும் இந்த குணம் உண்டு. ஆனால் தமிழக முதல்வர் யாரையும் சந்திப்பதே இல்லை. தமக்கு எல்லாமே தெரியும் என்ற நிலையில் உள்ளார். உலகிலேயே ஒரே ஒரு அறிவாளி தான் தான் என ஜெயலலிதா, தன்னை நினைத்து கொள்கிறார்.

ragul may 7

திமுகவும், காங்கிரசும் ஒரே சிந்தனை, ஒரே நோக்கத்திற்காக இணைந்து செயல்படுகின்றன. ஆனால் மக்களை சந்திக்காமல் மக்களை பற்றி தெரிந்து கொள்ள முடியாதவர்கள். இவர்கள் தங்களை பெருமையாக நினைத்து கொள்கின்றனர் கடந்த முறை ஜெயலலிதா இலவச பொருட்களை தருவதாக வாக்குறுதி அளித்தார். 5 ஆயிரம் ரூபாய் இலவசமாக கொடுப்பதாக, ஒவ்வொரு குடும்பத்திலும் இருந்து 60 ஆயிரம் மது மூலமாக அபகரித்து கொண்டார். மிக்ஸி, கிரைண்டர் செயலற்று போனதாக கூறப்படுகிறது.

இந்தியாவிலேயே மிக வளர்ந்த மாநிலமாக இருந்த தமிழ்நாடு தற்போது பின்தள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் மதுக்கடைகளின் எண்ணிக்கை மிக அதிகமாகிவிட்டது. ஒரு குடும்பத்திற்கு ரூ.5 ஆயிரம் மதிப்புள்ள இலவசங்களை கொடுத்துவிட்டு மதுவின் மூலமாக ரூ.60 ஆயிரம் வருமானத்தை ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் எடுத்துக் கொண்டது அதிமுக ஆட்சி. எதிர்கட்சிகளை நசுக்கும் கட்சியாக ஆளுங்கட்சி இருக்கக்கூடாது. 4 சுவர்களுக்குள் முடங்கி கிடக்கும் முதல்வர் நமக்கு தேவையில்லை. தமிழகத்தில் வெள்ளம் வந்தபோது டெல்லியில் இருந்து நான் வந்தேன். ஆனால், தமிழக முதல்வராக இருக்கும் ஜெயலலிதா சென்னையில் இருந்தும் கூட 4 சுவர்களுக்குள்ளே முடங்கி இருந்தார்.

தலித் மக்களில் 90 சதவீதம் பேர் நிலமற்ற ஏழைகளாக தமிழ்நாட்டில் இருக்கிறார்கள். வேலை இல்லாத சூழ்நிலை தமிழ்நாட்டில் தொடரந்து கொண்டே இருக்கிறது. லட்சக்கணக்கான இளைஞர்கள் வேலைகள் இல்லாமல் தவித்து வருகிறார். முன்பெல்லாம் தொழிற்சாலைகள் தமிழ்நாட்டை தேடி வந்த நிலையில், தற்போது இங்கு வருவதற்கே அஞ்சுகின்றன. தொழில் துவங்குவதற்கு லட்சக்கணக்கில் லஞ்சம் கொடுக்க வேண்டியிருப்பதால் தொழில் அதிபர்கள் தமிழ்நாட்டிலே தொழில் துவங்க முன்வர அஞ்சுகிறார்கள்.அதிமுக ஆட்சியில் தமிழகம் பின்தங்கிய மாநிலமாகிவிட்டது. காமராஜரோ, எம்.ஜி.ஆரோ இது போன்ற ஒரு தமிழ்நாட்டை கனவு காணவில்லை. இந்தியாவிலேயே முதல் மாநிலமாக தமிழகத்தை கொண்டு வருவதுதான் எங்கள் நோக்கம்” என்றார்

Related Posts