ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்!

ஆந்திராவில் அனைத்து பஸ்களுக்கும் ரூட கிளியர்!

ஆந்திராவில் போராட்டம் வாபஸ் பெற்றதையடுத்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.அத்துடன் திருப்பதி, சித்தூர், நெல்லூர், விஜயவாடா, ஐதராபாத், கடப்பா, கர்ணூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.
14 -TIRUMALA_ROUTE
தெலுங்கானா தனி மாநிலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வந்தன. இதனால் தமிழகத்தில் இருந்து ஆந்திரா மாநிலத்திற்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது.

சென்னை கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்ட ஆந்திர மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்களும், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக பஸ்களும் நிறுத்தப்பட்டன. 2 மாதத்திற்கும் மேலாக பஸ்கள் இயக்கப்படாததால் ஆந்திர மாநில பஸ்கள் டெப்போவிற்கு கொண்டு செல்லப்பட்டன. தமிழக பஸ்கள் மட்டும் ஆந்திர எல்லையான ஆரம்பாக்கம் வரை இயக்கப்பட்டு வந்தது.

தற்போது திருப்பதியில் பிரம்மோற்சவம் திருவிழா நடந்து வருகிறது. பஸ் போக்குவரத்து இல்லாததால் இதில் பங்கேற்க முடியாமல் பக்தர்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள்.இந்த நிலையில் ஆந்திராவில் போராட்டம் வாபஸ் பெற்றதையடுத்து மீண்டும் பஸ் போக்குவரத்து தொடங்கியுள்ளது. நேற்று இரவு முதல் கோயம்பேட்டில் இருந்து பஸ்கள் ஓடத்தொடங்கின.

திருப்பதி, சித்தூர், நெல்லூர், விஜயவாடா, ஐதராபாத், கடப்பா, கர்ணூல் உள்ளிட்ட அனைத்து பகுதிகளுக்கும் பஸ் போக்குவரத்து தொடங்கியது.ஆந்திர மாநில அரசு பஸ்களும், தமிழக அரசு பஸ்களும் வழக்கம் போல ஓடுகின்றன.

இதனால் திருப்பதி செல்லக்கூடிய பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 77 நாட்களுக்கு பிறகு ஆந்திர மாநிலத்திற்கு தமிழகத்தில் இருந்து பஸ்கள் மீண்டும் செல்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.