நம்ம இந்திய-அமெரிக்கர் அமெரிக்காவோட சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகிறார்?

நம்ம இந்திய-அமெரிக்கர் அமெரிக்காவோட சுப்ரீம் கோர்ட் ஜட்ஜ் ஆகிறார்?

அமெரிக்காவின் சுப்ரீம் கோர்ட் ஜட்ஜா இருந்த அண்டோனின் ஸ்காலியா(79) மேற்கு டெக்சாஸ் மாநிலத்தில் உள்ள சொகுசு ஓய்வு விடுதியில் மரணம் அடைந்தார். பழமைவாதத்தையும், அமெரிக்காவின் தொன்மையான கலாசாரத்தையும் பாதுகாக்கும் வகையில் பல்வேறு முக்கிய தீர்ப்புகளை எழுதியுள்ள ஸ்காலியாவின் மரணம் இயற்கையாக அமைந்ததாக சுப்ரீம் கோர்ட் சீஃப் ஜட்ஜ் ஜான் கூறி உள்ளார். அண்டோனின் ஸ்காலியா மறைவுக்கு அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா இரங்கல் தெரிவித்துள்ளார். அண்டோனின் ஸ்காலியா மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில் சுப்ரீம் கோர்ட் வளாகத்தில் அமெரிக்காவின் தேசியக் கொடி அரைக்கம்பத்தில் பறக்க விடப்பட்டுள்ளது.
dc-Cover-cq2qesjsa2tv6rf6qt3uivqcl4-20160214103722.Medi
இதற்கிடையில் அண்டோனின் ஸ்காலியாவுக்கு பதிலாக புதிய நீதிபதியை நியமிப்பது தொடர்பாக அதிபர் ஒபாமா ஆலோசித்துவரும் நிலையில் அமெரிக்கவாழ் இந்தியரான ஸ்ரீ ஸ்ரீனிவாசன் உள்பட ஐந்து நீதிபதிகளின் பெயர்கள் இப்பதவிக்காக பரிசீலிக்கப்பட உள்ளதாக தெரிகிறது. சீனிவாசன் முன்னதாக, அமெரிக்காவின் பிரதான துணை சொலிசிட்டர் ஜெனரலாக இருந்தார். அதற்கு முன்னதாக அமெரிக்க சுப்ரீம் கோர்ட், அப்பீல் கோர்ட்களில் பிரபலமான வக்கீலாக இருந்தார். இப்போது அவர் நீதிபதியாக பதவியேற்ற கொலம்பியா அப்பீல் கோர்ட், சுப்ரீம் கோர்ட்டுக்கு அடுத்தபடியாக அதிக அதிகாரம் படைத்த நீதிமன்றம் ஆகும். அமெரிக்க சட்ட வரலாற்றில், தெற்காசியாவை சேர்ந்தவர், நீதிபதியாக பதவியேற்றது இதுவே முதன் முறையாகும். இப்போது, அவர் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டால் முதல்முறையாக இச்சாதனை செய்தவர் ஆவார்.

அதே சமயம் புதிய நீதிபதியை நியமிப்பதில் ஒபாமா அவசரம் காட்டக்கூடாது என எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கூறுகின்றனர். நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் வெற்றிபெற்று புதிய அதிபராக பதவி ஏற்பவர்தான் இந்த நியமனத்தை செய்ய வேண்டும் எனவும் அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்.

“சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக நியமனம் செய்ய வழங்கப்பட்டு உள்ள பரிந்துரை பட்டியல் ஸ்ரீ ஸ்ரீனிவாசனுடைய (கொலம்பியா சர்க்கியூட் அப்பீல் கோர்ட் நீதிபதியாக இருப்பவர்) பெயருடன் (வயது 48) தொடங்குகிறது. அமெரிக்க நீதித்துறையில் அதிகாரம் பெற்ற அமெரிக்க கோர்ட்டு ஆப் அப்பீஸில் உறுப்பினராக உள்ளவர்.” அதிபர் ஒபாமா நீதிபதியாக கடந்த 2012 ஜூன் மாதம், சீனிவாசனின் பதவி நியமனத்தை பரிந்துரைத்தார். பின்னர் 2013-ம் ஆண்டு ஒரு மனதாக செனட்டில் அங்கீகாரம் அளிக்கப்பட்டது. சண்டிகாரில் பிறந்தவரான ஸ்ரீ சீனிவாசனுக்கு வயது 46. சீனிவாசனின் பெற்றோர் கடந்த 1970-ம் ஆண்டு அமெரிக்கா சென்றுள்ளனர். அமெரிக்கா வரலாற்றில் தெற்கு ஆசிய சர்க்யூட் நீதிமன்றத்தின் நீதிபதியாக பதவியேற்ற முதல் அமெரிக்க வாழ் இந்தியர் சீனிவாசன் ஆவார். அமெரிக்காவின் மிக உயர்ந்த நீதிமன்றம் ஒன்றில் நியமிக்கப்பட்டுள்ள சீனிவாசன் மேல்முறையீட்டு பணிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டவ.ர் என்பது குறிப்பிடத்தக்கது

Related Posts