நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களின், திட்ட அனுமதி ரத்து!
2014ல் ஹைகோர்ட் மதுரை கிளை பிறப்பித்த உத்தரவுபடி, நீர்நிலைகளில் உள்ள கட்டடங்களின், திட்ட அனுமதிகளை ரத்து செய்வதற்கான பூர்வாங்க நடவடிக்கை துவங்கி உள்ளது. அதாவது அரசின் இந்த முடிவால், நில பயன்பாடு மாற்றம் அடிப்படையில் வழங்கப்பட்ட, 500க்கும் மேற்பட்ட, திட்ட அனுமதிகள் ரத்தாகும் நிலை ஏற்பட்டு உள்ளது.

நீர்நிலைகள் ஆக்கிரமிக்கப்பட்டதே, சமீபத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புக்கு காரணம். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டத்தில், ஏரி, குளங்கள், கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நடந்து வருகிறது நீர்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாதது, பராமரிப்பு இன்மை குறித்து தொடரப்பட்ட வழக்கில் மதுரை கிளையில், 2014ல், நீதிபதிகள் ராமசுப்ரமணியன், வேலுமணி ஆகியோர் அடங்கிய, ‘பெஞ்ச்’ பிறப்பித்த உத்தரவு
* நீர்நிலைகளில், எவ்வித கட்டுமான திட்டங்களுக்கும் அனுமதி அளிக்க கூடாது என அனைத்து மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளுக்கு, அரசு உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும்
*நீர்நிலைகளில், எவ்வித கட்டுமான திட்டங்கள், மனைப்பிரிவுகளுக்கு அனுமதி அளிக்க கூடாது என, அனைத்து உள்ளூர் திட்டக்குழுமங்கள், பெருநகர் வளர்ச்சி குழுமங்களுக்கு, அரசு அறிவுறுத்த வேண்டும்.
*புதிதாக திட்ட அனுமதி அளிப்பதற்கான விண்ணப்பங்களை பரிசீலிக்கும் போது, அதற்கான நிலத்தில், எந்த பகுதியும் நீர்நிலையாகவோ, அதை சார்ந்ததாகவோ இல்லை என, சம்பந்தப்பட்ட பகுதிக்கான வருவாய் துறை அதிகாரிகளின் சான்று இருக்க வேண்டும் என்பதை உறுதிப்படுத்த வேண்டும்ஓராண்டுக்குள்…நகர் மற்றும் ஊரமைப்பு சட்டத்தின் கீழ், இதற்கான உத்தரவுகளை சம்பந்தப்பட்ட துறைகளுக்கு, அரசு பிறப்பிக்க வேண்டும்
*நீர்நிலைகளை பாதுகாப்பதற்காக, பொதுப்பணித்துறை தெரிவித்து உள்ள திட்ட பணிகளை, ஓராண்டுக்குள் நிறைவேற்ற வேண்டும்
* நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற, உள்ளாட்சி அமைப்புகள், வருவாய்த்துறை எடுக்கும் நடவடிக்கைகளை முடக்கும் வகையில், எந்த உரிமையியல் நீதிமன்றமும் உத்தரவு பிறப்பிக்கக் கூடாது.இவ்வாறுஅந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டு உள்ளது.இந்த உத்தரவு வழங்கப்பட்டு, ஓராண்டுக்கு மேல் ஆகியும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதது, சம்பந்தப்பட்ட துறைகளுக்கு சிக்கலை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆக்கிரமிப்பு விவகாரம் பரபரப்பாகி உள்ள சூழலில், 2014 வழக்கின் மனுதாரர், சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள் மேல், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால், அரசுக்கு சிக்கல் ஏற்படும் ரத்து?இதை தவிர்க்க, நீர்நிலை பகுதிகளில், நில பயன்பாடு மாற்றத்தின் அடிப்படையில் வழங்கப்பட்ட, திட்ட அனுமதிகளின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன
இந்த விவரங்கள் ஆராயப்பட்டு, நீதிமன்ற உத்தரவுக்கு மாறாக இருக்கும் அனுமதிகள் மீது ரத்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


