நானும் ரெளடிதான்! – திரைப் பார்வை

நானும் ரெளடிதான்! – திரைப் பார்வை

ரொம்ப நாள் ஆச்சு..ஒரு நல்ல திரைகதையுள்ள முழு நீள எண்டர்டெயின்மென்ட் பார்த்து..நயன் போட்டி யில்லாமல் மேலே அடுத்தக் கட்டத்துக்கு நகர்வது தெள்ளத் தெளிவு..நானும் ரவுடிதான் என்ற டைட்டிலுக்கு முன் லைக்கா ப்ரொடக்ஷன்ஸ் வந்து ” ஹை..இப்ப என்ன பண்ணுவ?, இப்ப என்ன பண்ணுவ??” என்று குள்ளமணி ஒரு காட்சியில் கேப்பது போல குதித்து விட்டு சென்றது.
Naanum-Rowdy-Dhaan
விஜய் சேதுபதி என்டரிக்கு பக்கத்தில் உள்ள ஜீன்ஸ் பெண் கைதட்ட எனக்கும் உற்சாகம் வந்து கைதட்டினது தப்பா என்ன? இதற்கு பதிலாக நயன் என்ட்ரி காட்சியில் ஒரு கணவரும், தியேட்டரும் சேர்ந்து கைத்தட்டி கொண்டாடியது..ஹிரோயினாக ஜெயித்துக் கொண்டு இருக்கிறார்.

ரவுடின்னா என்ன..சாதாரண மனுஷன் ரவுடி ஆக முடியுமா? இதான் பாட்டம் லைன்..அதற்கு திரைக்கதை நிஜமாகவே செம..அடித்து தூள் கிளப்பி இருக்கிறார்கள். ஒவ்வொரு சீனும் ரசிக்க வைக்கிறது…முக்கால்வாசி தொய்வில்லாமல் சிரிக்க வைக்கிறது.

வசனமும் ஆங்காங்கே எகிற வைக்கும் ..அதுவும் “காதல்ன்னா பிரச்னை வரும், பிரச்னை வந்தா பிரிஞ்சு இருப்பாங்க..பிரியறப்ப ஒருத்தரை, ஒருத்தர் மிஸ் பண்ணுவாங்க..மிஸ் பண்றப்ப இன்னும் காதல் ஸ்ட்ராங் ஆகும்” நடுவுல ப்ரெண்டா இருந்துகிட்டு ரூட்டு போடறது..எச்சில் டா..அசிங்கம் டா..எதுவும் முடியாதுடா..காதலிக்கிறப்பவே இரண்டுப் பேரும் பவுண்டேஷனை ஸ்ட்ராங் ஆ போட்டுடுவோம்..சேர்ந்துடுவோம்” இனிமே இந்த வசனத்தை அடிக்கடி கேக்க முடியும்..இது கண் முன்னாடியே தியேட்டரில் ஹிட் அடிச்சது..

பார்த்திபன், ராதிகா சீனியர்கள் எல்லாம் சிக்சர்கள் அடித்துக் கொண்டுருக்க..ஜூனியர்கள் கைக்கு எட்டும் பந்துகளை பவுண்டரிக்கு அனுப்பிக் கொண்டிருந்தனர். ஆக மொத்தம் அடித்து ஆடி உள்ளனர். அதுவும் வசனம்..செல்பி எடுத்து வாட்ஸ் அப் ல அனுப்பு என்று போட்டோ எடுப்பதை குறிப்பிட..தாத்தா GPS லொகேஷன் அனுப்பறது..அசத்தல்.நல்ல தற்கால புரிதல் உள்ள இயக்கம் என்று தெரிகிறது.

நயன்தாரா..சொல்லியே ஆகணும்..தியேட்டரில் உள்ள பெண்கள் இவரை பார்த்தவுடன் நாளை ஜிம் ட்ரேட் மில் ல ஓடப்போவது நிச்சயம் என்றே முகப்பாவங்கள் சொன்னது. அப்ப மிச்முள்ளவர்கள்? “ஹப்ப்ப்பப்ப்ப்பா” ..கேட்டுச்சு..கேட்டுச்சு..

ஒரு நல்ல ஜாலியா, எந்த தலை கசக்கலுக்கும் உள்ளாக்காம, வாய் விட்டு சிரிக்க வைச்சு , பட்ஜெட் பிரமாண்டம் இல்லாம, மனசை ஒட்டி இசையும், திரையும் பயணம் செய்யும் படத்தை கொடுத்ததுக்கு தனுஷுக்கு நன்றி.

படத்தை பற்றி இது போதும்..நயனை பார்த்த பாதிப்பில் ஜிம் இப்பவே என்னை வா வான்னு கூப்பிடுது.

கிருத்திகாதரண்

Related Posts