ஆந்திரா கலவரத்தால் தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கும?
ஆந்திராவில் இருந்து தமிழகத்திற்கு மின்சாரம் வழங்கும் இரண்டு அனல் மின் நிலையங்கள் மத்திய அரசுக்கு சொந்தம் என்பதால் அங்கு, தற்போது மின் உற்பத்தி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தாலும் போராட்டம் தீவிரமடையும் என்று கூறப்படுகிறது. இதனால், தமிழகத்தில் மின் வினியோகம் பாதிக்கப்படும் என தெரிய வருக்கிறது.

ஆந்திர மின் உற்பத்தி கழகத்திற்கு சொந்தமாக விஜயவாடாவில் டாக்டர் நர்லா டாடா ராவ் அனல் மின் நிலையம் உள்ளது. இங்கு தலா 210 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட ஆறு அலகுகள் மூலம் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.இந்த அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளதால் மின் உற்பத்தி முற்றிலுமாக முடங்கி போயுள்ளது. இதனால் ஆந்திராவின் கடலோர மாவட்டங்கள், இருளில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதற்கிடையில் ஆந்திராவில் நடந்து வரும் கலவரங்களால் தமிழகத்திலும் மின் வினியோகத்தில் சிக்கல் ஏற்படும என்ற அச்சம் நிலவி வருகிறது.ஆந்திராவில் தேசிய அனல் மின் நிலையத்துக்கு (என்.டி.பி.சி.,) சொந்தமாக கரீம் நகர் மாவட்டம், ராமகுண்டத்தில் 2,600 மெகா வாட் விசாகப்பட்டினம், சிம்மாத்ரியில், 2,000 மெகா வாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு அனல் மின் நிலையங்கள் உள்ளன.மத்திய அரசுக்கு சொந்தமான இரண்டு அனல் மின் நிலையங்களில் இருந்து தமிழகத்திற்கு 900 மெகா வாட் மின்சாரம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இருப்பினும் நாள்தோறும் 600-700 மெகா வாட் என்ற அளவில் மின்சாரம் கிடைத்து வருகிறது.