பூமி போல இன்னொரு கோள்! – இது 13000 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது.
OGLE’s (Optical Gravitational Lensing Experiment) என்னும் அதி சக்தி வாய்ந்த 1.3 மீட்டர் டெலஸ்கோப் Poland நாட்டில் உள்ள வார்ஸா என்னும் இடத்தில் இருப்பது பலருக்கு தெரியும். இந்த வான் ஆராய்ச்சி மையத்தில் பல விஷயங்களை கண்டுப்பிடித்து கூறுவார்கள். இப்போது பூமி போல இன்னொரு கோள் இருப்பதாக நேற்று கண்டறிந்துள்ளனர். இது 13000 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளதாம்.

இந்த ஆரம்ப ஆராய்ச்சியில் இந்த கோள் முழுவதும் வாயுக்கள் நிரம்பியதாக இருப்பதாக கூறியுள்ளனர். இது வரை பல கோள்களை கண்டறிந்தாலும் அதன் இருப்பிடத்தை துள்ளியமாக அறிய மிக கடினமாக இருந்த வகையில் மைக்ரோலென்ஸிங் என்னும் புது முறையின் மூலம் நாசாவுடன் இனைந்து ஸ்பிட்ஸர் ஸ்பேஸ் டெலஸ்கோப் வைத்து இந்த கோள் மட்டும் அல்ல இனிமேல் எதை கண்டுப்பிடித்தாலும் அதன் தூரம் இருப்பிடம் மற்றும் அதன் தன்மையை துல்லியமாக கணிக்க முடியுமாம்.
ஸ்பிட்ஸர் டெலஸ்கோபி மட்டும் தான் மைக்ரோலென்ஸ் பேரலக்ஸ் மூலம் கணக்கெடுக்கபடுகிறது. இது உலகத்திலே அமெரிக்காவில் உள்ள ஹார்வர்ட் ஸ்மித்ஸோனியன் வான் சாஸ்திர நிலையத்தில் மட்டும் தான் இருக்கிறது. வார்ஸா டெலஸ்கோப் இதை கண்டறியும் முன்பே 20 நாட்களுக்கு முன் இந்த ஸ்பிட்ஸர் கன்டறிந்ததால் இரண்டு வான் சாஸ்திர ஆராய்ச்சி நிலையங்களும் இதை உறுதிபடுத்தியுள்ளது.
இந்த ஸ்பிட்ஸர் மூலம் இது வரை 30 கோள்களை கண்டறிந்துள்ளனர். இந்த டெலஸ்கோப் இதற்க்கு முன் அதி தூரமான ஒரு கோள் 27000 ஒளி வருடங்களுக்கு அப்பால் உள்ளது என்பதை கண்டறிந்துள்ளது என்ற ஆச்சர்யமான தகவலுடன்…….. பூமிக்கு மிக அருகேன்னு இலந்தப்பழம் பாடகி கொஞ்ச நாள்ல உங்க தொலைக்காட்சியில் பிளாட் விக்கதான் போறாங்க பாருங்க…………..
New Planet Found in 13000 Light Years Distance –


