கடல் படத்தால் அடைந்த கடனை அடைத்தால்தான் மணிரத்னமின் ‘ஓ காதல் கண்மணி ரிலீஸ்!

கடல் படத்தால் அடைந்த கடனை அடைத்தால்தான் மணிரத்னமின் ‘ஓ காதல் கண்மணி ரிலீஸ்!

மணிரத்னம் இயக்கும் ‘ஓ காதல் கண்மணி’ படம் வருகிற 17–ந் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தில் துல்சர் சல்மான், நித்யா மேனன் ஜோடிகளாக நடித்துள்ளனர்.
ok kanmani
இந்த நிலையில் ‘கடல்’ படத்துக்கு நஷ்டஈடு கொடுக்கும்வரை ‘ஓ காதல் கண்மணி’ படத்தை வெளியிடக்கூடாது என்று தயாரிப்பாளர் சங்கத்தில் விநியோகஸ்தர் மன்னன் புகார் மனு அளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள மனுவில்,”மணிரத்னம் ஏற்கனவே ‘கடல்’ படத்தை இயக்கி வெளியிட்டார். அந்த படத்தின் விநியோக உரிமையை நான் வாங்கி இருந்தேன். அதில் எனக்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது. அதற்காக வாங்கிய கடனுக்கு இன்னும் வட்டி கட்டக் கூட முடியாமல் இருக்கிறேன்.

மனிதாபிமான அடிப்படையில் தற்போது பெரிய நிறுவனங்கள் படத்தின் விநியோகஸ்தர் நஷ்டமடைந்தால் அதற்கு நஷ்டஈடு வழங்கி வருகின்றன. எனவே எனக்கும் ‘ஓ காதல் கண்மணி’ பட வெளியிட்டுக்கு முன் மணிரத்னத்திடம் இருந்து நஷ்டஈடு பெற்ற தரவேண்டும். அதுவரை ‘ஓ காதல் கண்மணி’ படத்தை வெளியிடக்கூடாது.” என்று தெரிவித்துள்ளார்.

Related Posts