32°C
விளம்பரம்
Advertisement

‘அன்பில் அவன்’ பட வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழாத் தகவல்!

admin சேலம் Published: September 22, 2026 3 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice



மிழ்சினிமாவில் தரமான மற்றும் வித்தியாசமான கதைகளம்சங்களுக்கு எப்போதுமே வரவேற்பு உண்டு. அந்த வகையில், அசோக் செல்வன் மற்றும் ப்ரீத்தி முகுந்தன் நடிப்பில், ஆர்.கார்த்திகேயன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படம் வரும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், படத்தின் முன் வெளியீட்டு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ் சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு, ‘போர் தொழில்’ படத்தின் இயக்குநர் விக்னேஷ் ராஜா கதையை எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஆர்.கே. செல்வா படத்தொகுப்பையும், மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தையும் கவனித்துள்ளனர். ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார்.

விழாவில் பேசிய தயாரிப்பாளர் அபிநயா செல்வம், கதையின் தரமும் புத்திசாலித்தனமான குழுவினருமே இப்படத்தைத் தேர்ந்தெடுக்கக் காரணம் என்றார். அசோக் செல்வனுடன் வேலை செய்தது குறித்தும், ஒரு தம்பதியினர் தங்கள் சிக்கல்களில் இருந்து எப்படி மீள்கிறார்கள் என்பதைப் பேசும் கதையாக இது இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐங்கரன் இன்டர்நேஷனல் சார்பில் பேசிய கவிதா பாண்டியன், அசோக் செல்வனின் அர்ப்பணிப்பையும் படத்தின் சிறப்பையும் சுட்டிக்காட்டினார். நடிகர் கௌதம் ராம் கார்த்திக் பேசுகையில், அசோக் செல்வனை ‘கனவு நண்பன்’ என்று வர்ணித்து, படத்தின் மேஜிக்கைப் பாராட்டினார்.

திங்க் மியூசிக் சந்தோஷ், கோவிந்த் வசந்தாவின் இசையில் உருவாகியுள்ள பாடல்கள் ஏற்கனவே மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளதாகத் தெரிவித்தார். குறிப்பாக ‘ஆசை வரமே’, ‘கல்லா நிக்கிறியே’ போன்ற பாடல்கள் ரசிகர்களை ஈர்த்துள்ளதாகக் கூறினார்.

படத்தொகுப்பாளர் ஆர்.கே. செல்வா, ஒளிப்பதிவாளர் கௌதம் ராஜேந்திரன் ஆகியோர் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டதுடன், இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரின் ஒத்துழைப்பைப் பாராட்டினர். நடிகர் ஹரிஷ் கல்யாண் பேசுகையில், அசோக் செல்வனின் துணிச்சலான சாகசங்களையும், ப்ரீத்தி முகுந்தனின் அர்ப்பணிப்பையும் பாராட்டியதுடன், இன்னும் ஐந்து ஆண்டுகளில் அசோக் செல்வன் ஒரு பான் இந்தியா நட்சத்திரமாக மாறுவார் என்று வாழ்த்தினார்.

இசையமைப்பாளர் கோவிந்த் வசந்தா, தான் நீண்ட நாட்களுக்குப் பிறகு முழுமையாக ரசித்துப் பணியாற்றிய படம் இது என்று குறிப்பிட்டார். கதையாசிரியர் விக்னேஷ் ராஜா, வட இந்தியாவில் நடந்த ஒரு நிஜச் சம்பவம்தான் இப்படத்தின் முதல் விதை என்று சுவாரஸ்யமான தகவலைப் பகிர்ந்துகொண்டார்.

படத்தில் வில்லன்களாக நடித்துள்ள கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ் மற்றும் சபு மோன் ஆகியோர் தங்கள் பாத்திரங்கள் குறித்தும், படப்பிடிப்பின் போது பட்ட கஷ்டங்கள் மற்றும் அனுபவங்கள் குறித்தும் நகைச்சுவையுடன் பேசினர். குறிப்பாக, சபு மோன் மலையாளத்திலிருந்து வந்து தமிழ் கலாச்சாரத்துடன் இணைந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்டார்.

ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் பேசுகையில், தனது 34 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் இவ்வளவு உணர்வுபூர்வமாக ஒரு சிறிய படத்துடன் ஒட்டிக் கொண்டது இதுவே முதல் முறை என்றார். 70 அடி உயரத்தில் இருந்து குதிப்பது போன்ற சண்டைக் காட்சிகளையும், படத்தின் இறுதிக்கட்ட பரபரப்பையும் அவர் விவரித்தார்.

இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, அசோக் செல்வனின் சினிமா மீதான காதலையும், அவரது உழைப்பையும் சிலாகித்துப் பேசினார். இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இயக்குநர் ஆர்.கார்த்திகேயன் பேசுகையில், பல வருடங்களாகத் தாமதமான தனது இயக்குநர் கனவு நனவாகக் காரணமான விக்னேஷ் ராஜா, தயாரிப்பாளர் அபிநயா மற்றும் அசோக் செல்வன் ஆகியோருக்கு நன்றி தெரிவித்தார். நடுத்தரக் குடும்பத்திலிருந்து வந்து சிரமப்பட்டு இந்தப் படத்தை உருவாக்கியுள்ளதாகக் கூறினார்.

நடிகை ப்ரீத்தி முகுந்தன், தனக்கு அளிக்கப்பட்ட வலுவான பாத்திரத்திற்கும், படக்குழுவினர் தனக்குக் கொடுத்த ஊக்கத்திற்கும் நன்றி தெரிவித்தார்.

நிறைவாகப் பேசிய நாயகன் அசோக் செல்வன், இரண்டரை ஆண்டுகளுக்குப் பிறகு தனது படம் திரைக்கு வருவதைக் குறிப்பிட்டு, இந்தத் திரைப்படம் வெறும் பொழுதுபோக்காக இல்லாமல் ரசிகர்களுக்கு ஒரு சிறந்த திரையரங்க அனுபவத்தைத் தரும் என்றார். வீடு அடமானம் வைத்தும் தங்களை நம்பிப் பணத்தை முதலீடு செய்த பெற்றோருக்கும், உறுதுணையாக இருந்த குழுவினருக்கும் நன்றி கூறினார்.

அனைத்துத் தரப்பினரின் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் உருவாகியுள்ள ‘அன்பில் அவன்’ திரைப்படம் வரும் செப்டம்பர் 25ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்