32°C
விளம்பரம்

நடந்தா அல்லது ஓடினா துணி துவைக்கும் வாஷிங் மெஷின் வந்தாச்!

admin சேலம் Published: July 23, 2014 2 நிமிட வாசிப்பு Running News
எழுத்து அளவு:

செய்தியைக் கேட்க
தமிழ் குரல் / AI Voice




1980ல இருந்து கடந்த 24 ஆண்டுகளில் உலகில் அதிக எடையுள்ள மனிதர்களின் எண்ணிக்கை இரண்டு மடங்கு ஆகி தற்போது 140 கோடி பேர் அளவுக்கு அதிகமாய் குண்டாக உள்ளனர். இந்த வகையில் இள வயது ரத்த அழுத்தம் / ஸ்ட்ரோக் / ஹார்ட் அட்டாக் வருவது சகஜமாகிவிட்டது. இதற்கெல்லாம் காரணம் மனிதர்களின் உடல் உழைப்பை கொண்டு செய்யப்படும் தினசரி வேலைகளை மெஷின்கள் செய்ய ஆரம்பித்தது தான் காரணம். இதைக் கவனத்தில் கொண்டு எலக்ட்ரோலக்ஸ் என்னும் வீட்டு உபயோக பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் 2014 டிஸைன் லேப் போட்டியை நடத்தியதில் இந்த வகை வாஷிங் மெஷின்களை “ஸீ ஹியாங் ரெயூஸஸ்” என்னும் வடிவமைக்கும் நிறுவனம் உருவாக்கியுள்ளது.
ravi washing
இதற்கு துளி கூட மின்சாரம் தேவையில்லை. இதில் துணி துவைக்க நீங்கள் தினமும் இதில் நடைப்பயிற்ச்சி அல்லது ஜாகிங் செய்தால் அதன் மூலம் மின்சாரம் பெறப்பட்டு அதன் மூலம் அதில் உள்ள பேட்டரியில் துணி துவைக்கும். இதில் அதிக்கபடியாய் மின்சாரம் சேர்ந்து இருந்தால் அதன் மூலம் துணிகளை உலரவும் செய்ய முடியும். இனிமே வீட்டில ட்ரெட் மில் இல்லைனாலும் நம்ம இனிமே நடந்தா அல்லது ஓடினா போது துணி துவைச்ச மாதிரியும் ஆச்சு – உடம்பு ஆரோக்யமா வைக்கவும் முடியும் என்று நினைக்கையில் மிகுந்த மகிழ்ச்சியே…………ஆனா ஒழுங்கா துணி தோய்க்க துப்பில்லை – கொஞ்சம் ஓடவாது செய்யுங்கன்னு வீட்டம்மா இனிமே கொமட்ல குத்துவாங்க ஐயா

Treadmill and Washing Machine combined – Will work without electricity and power your home devices too – 1980ல

admin
சேலம்

செய்தியாளர் குழு. உடனுக்குடன் உண்மைச் செய்திகளை வழங்கும் முன்னணி செய்தியாளர்.

உடனடி செய்திகள்