வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ பட ட்ரெய்லர் அவுட்!

வடிவேலு – பகத் பாசில் இணைந்து நடித்த ‘மாரீசன்’ பட ட்ரெய்லர் அவுட்!

சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரித்திருக்கும் 98வது படமாக, இயக்குநர் சுதீஷ் சங்கர் இயக்கத்தில், வடிவேலு மற்றும் பகத் பாசில் இணைந்து நடித்திருக்கும் ‘மாரீசன்’ திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

வி. கிருஷ்ணமூர்த்தி கதை, திரைக்கதை, வசனம் எழுதி, கிரியேட்டிவ் டைரக்டராக பணியாற்றியுள்ள இந்தப் படத்தில், வடிவேலு, பகத் பாசில் உடன் கோவை சரளா, விவேக் பிரசன்னா, சித்தாரா, பி. எல். தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவணா சுப்பையா, ‘ஃபைவ் ஸ்டார் ‘கிருஷ்ணா, ஹரிதா, டெலிபோன் ராஜா உள்ளிட்ட பல பிரபல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். கலைச்செல்வன் சிவாஜி ஒளிப்பதிவு செய்ய, யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். ஸ்ரீ ஜித் சாரங் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள, மகேந்திரன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார்.

ஒரு கிராமிய பின்னணியிலான த்ரில்லராக (Traveling Thriller) உருவாகியிருக்கும் இந்தத் திரைப்படத்தை சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் பிரபல தயாரிப்பாளர் ஆர். பி. சவுத்ரி தயாரித்திருக்கிறார்.

இந்த திரைப்படம் ஜூலை 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், ட்ரெய்லர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தின் டீசருக்கு கிடைத்த வரவேற்பை விட, ட்ரெய்லருக்கு அனைத்து தரப்பு ரசிகர்களிடமிருந்தும் பெரும் ஆதரவு கிடைத்து வருவதாக படக்குழு தெரிவித்துள்ளது.

‘மாமன்னன்’ படத்திற்குப் பிறகு வடிவேலு – பகத் பாசில் கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும், ட்ரெய்லரில் சிறிய அளவில் திருட்டுகளில் ஈடுபடும் ஒருவனுக்கும், அல்ஸைமர் நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கும் இடையேயான மறக்க இயலாத பயணம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றிருப்பதாலும், ‘மாரீசன்’ படத்தை முதல் நாள் முதல் காட்சியில் பார்க்க வேண்டும் என்ற ஆர்வம் பார்வையாளர்களிடத்தில் எழுந்துள்ளது.

Related Posts