இந்தியா எடுக்கவேண்டிய சவாலை பாகிஸ்தான் எடுத்து நாசமாகின்றது!
பாகிஸ்தானின் ராணுவ தளபதியும் தன்னை ஒரு முல்லாவாக கருதி இந்திய பெரும் துவேஷம் கொண்டிருப்பவரும், பஹல்ஹாம் தீவிரவாத தாக்குதலுக்கு தொடர்புடைய தீவிரவாதிகளை தற்காத்து இந்தியாவிடம் வாங்கி கட்டி மயிரிழையில் உயிர்தப்பிய மூனீர் ஆசிம் அமெரிக்காவுக்கு அழைக்கபட்டிருக்கின்றார் அங்கு ஐந்துநாட்கள் தங்கி சில சந்திப்புக்களை மேற்கொள்வார் அமெரிக்கா இப்படியான நாடு, பாகிஸ்தான் அவர்களுக்கு பல காரணங்களுக்காக தேவை , ஜெயலலிதா சசிகலாவிடம் சிக்கியது போல ஏதோ ஒரு வகையில் பழைய தொடர்பில் சிக்கி கொண்டார்கள். பாகிஸ்தான் அவர்களை பல வகையில் முட்டாளாக்கிய தேசம் எனினும் பல காரணங்களுக்காக பொறுத்து கொண்டார்கள்.

இப்போது இவர் அழைக்கபட்டது பல முக்கிய காரணங்களுக்கு என்பது செய்தி, முதலில் அமெரிக்காவின் எப் 16 விமானங்கள் இந்தியாவால் அழிக்கபட்டது, அதே விமானத்தில் சீன ஏவுகனைகள் பொறுத்தபட்டது என நிறைய உண்டு, இந்தியாவின் பலத்தை அதன் எதிரி ஊடாக அறிவதில் அமெரிக்காவுக்கு ஆசை அதிகம் இதை எல்லாம் தாண்டி முக்கிய விஷயம் ஈரான். ஈரானை இஸ்ரேல் போட்டு தாக்கும் நேரம், அமெரிக்கா அதற்கு தயாராகும் நேரம் ஈரானின் அண்டைநாடான பாகிஸ்தானை முழுக்க நம்பமுடியாது. காரணம் என்னதான் ஷியா ஈரான் என்றாலும் துருக்கி அதிபர் உள்ளிட்டோர் ஏதும் கேட்டுகொண்டால் பாகிஸ்தானின் சதை ஆடலாம், அது சிக்கல்களை கொண்டுவரும்
இதை கணித்துத்தான் எங்களிடம் அணுகுண்டு இல்லாவிட்டாலும் அணுகுண்டு வைத்திருக்கும் ஒரே இஸ்லாமிய தேசமான பாகிஸ்தான் அணு ஆயுதம் தரும் என ஈரான் பேசியது .அதை பாகிஸ்தான் மறுத்தாலும் அவர்கள் உண்மை முகம் உலகறியும். ஈரான் இனி எல்லா ஆயுதங்களையும் பயன்படுத்தும் அதில் தீவிரவாதமும் ஒன்று, இன்றைய தேதியில் தீவிரவாதிகள் சகல சவுகரியமாக வாழும் நாடு பாகிஸ்தான், சீன யுகான் வைரஸ் நிலையம் போல பாகிஸ்தானில் எல்லாவித தீவிரவாதமும் உருவாக்கபட்டு காக்கபடும்.அதன் தலமையகம் பாகிஸ்தான் ராணுவம், இஸ்ரேல் ஈரான் போரில் பெரும் தீவிராவாத தாக்குதல் வராதபடிக்கும் இன்னும் பெரும் யுத்தம் வெடித்தால் பாகிஸ்தானில் இருந்து அமெரிக்கா தாக்கும்படிக்கும் ஒரு வளையத்துக்குள் இவரை கொண்டுவர பேச்சு நடத்தலாம்
இங்கே அமெரிக்காவின் நிலை அப்படி, இந்திய நிலை இன்னும் சிக்கலானது அதனால் இந்தியாவின் ராணுவ தளங்களை அமெரிக்காவோ இஸ்ரேலோ நேரடியாக பயன்படுத்த அனுமதிக்க முடியாது அது பல சிக்கலை தரும்
இதனால் அவர்கள் கையினை கொண்டே அவர்கள் கண்ணை குத்துவதுதான் சரி என இந்தியாவும் நடப்பதை அவதானிக்கின்றது . பாகிஸ்தான் என ஒன்றை ஏன் உருவாக்கினார்கள் என்றால் இதற்காகத்தான், ஓடாத கடிகாராமும் இருமுறை சரியான நேரம் காட்டுதல் போல பாகிஸ்தானும் சில காரியங்களுக்கு இப்படி பயன்படும்.
இன்று வரலாற்றில் முக்கியமான நாள், 1739ம் ஆண்டு இதே நாளில்தான் ஈரானிய மன்னன் நாதிர்ஷா டெல்லியில் படையெடுத்து முகலாயத்தை நொறுக்கி மயிலாசனம் , கோஹினூர் வைரமெல்லாம் கொள்ளையிட்டு டெல்லியினை சூறையாடினான் அதாவது மொகலாயமும் பாரசீகமும் இஸ்லாமிய தேசம் என்றாலும் இப்படி மோதிகொண்டன.இன்று முள்ளை முள்ளால் எடுப்பது போல் பாகிஸ்தான் துணையுடன் ஈரானை இன்னும் நொறுக்க வியூகம் வகுக்கபடுகின்றது, காலம் எல்லாவற்றையும் சரியாக செய்கின்றது. சில இடங்களில் இந்தியா எடுக்கவேண்டிய சவாலை பாகிஸ்தான் எடுத்து நாசமாகின்றது, கெட்டதிலும் ஒரு நல்லது இதுதான்.


